அனைத்தையும் ஆள பிறந்த மனிதனையும்
ஆள பிறந்த ஆயுதம் தான்
இந்த மனிதனின்
மனது....!!
- இரா.சுதர்சன்
வாழ்க்கை....
விடை தெரியாமல் கேள்விக்குறியாய்
விடை தெரிந்தும் கேள்விக்குறியாய்
மரணம்....!!
- இரா.சுதர்சன்
Saturday, 24 December 2011
புரியவில்லை..!
சில மணி நேர
சுகமான தூக்கத்திற்கு அலையும் மனிதன்..
நிரந்தர சுகமாம்
சுடுகாட்டு உறக்கத்திர்க்கு மட்டும் அஞ்சுவது ஏனோ....??
- இரா.சுதர்சன்
Friday, 23 December 2011
கலிகாலத்தில் யாரயும் நம்பாதே..!
காரியம் முடிந்தால்
கால்களை வாரி விடும்
கள்ளர்கள் வாழும் கூட்டமடா இது....!!
- இரா.சுதர்சன்
ஊனமுற்றோர் முன்னிலையில்
ஏதும் செய்யாமல்
ஊமையாய் இருப்பின்
குறையின்றி இருக்கும்
மனிதர் கூட
ஊனமுற்றோரே....!!
-இரா.சுதர்சன்
வெயில் பாரா பறவை போல நான்..!
ஆம்
தீபம்போன்ற என்னவளை
எப்போது பார்த்தாலும்
அனைக்கவே தோன்றுகிறது....!!
-இரா.சுதர்சன்
பெண்களை கிண்டல் செய்தவரை
கடவுள் என்றார்கள் அன்று..!
அதையேஇப்பொது செய்தால் ஈவ் டீசிங் என்று சொல்லி உள்ளே போடுகிறார்கள் இன்று....!! -இரா.சுதர்சன்
பால் என்ன
மோர் என்ன
தயிர் என்ன
தேன் என்ன
காய்கள் என்ன
கனிகள் என்ன
அட அட..!
சிறு வயிற்றிற்கு ஏதும் இன்றி
பஞ்சப்பாட்டு பாடும் மனிதர்கள் நடுவே
மௌனமாய் இருக்கும் கற்சிலைக்கு படையளாம்....!!
- இரா.சுதர்சன்
Thursday, 22 December 2011
நீருமில்லை கண்ணாடியுமில்லை..
ஆனால் கண்கள் மட்டும் கூசுகின்றது
என்னவள் கண்களை பார்த்தது போல..!
ஹோ மயிர் இல்லா மண்டையுடன்
என்னவளின் தந்தை அது....!
-இரா.சுதர்சன்
( இது என்னவளின் தந்தைக்கு சமர்ப்பணம் ஹ ஹ ஹ ஹ )
நிலை கெட்ட மனிதர்கள்
தன்னை நிலைநிறுத்திக்கொள்ள..
தெரிந்தொன்று தெரியாமலொன்று பேசும்
புத்திசாலி சில இந்த அலுவலகங்களிலும்
இருக்கும் அரசியல்வாதிகளாம்....!!
-இரா.சுதர்சன்
உணர்ச்சி பெருக்கெடுத்து..
உதடுகள் முறுக்கேறி..
பற்களை கடித்து..
விரல்களை முறுக்கி..
ரத்தம் தலைக்கேற..
கண்கள் சிவந்து..
இதய துடிப்பு அதிகரிக்க..
அச்சோ அச்சோ..!
எத்தனை வரவேற்ப்பு
யாரும் வரவேற்க்காத
இந்த கோபத்திற்கு....!!
- இரா.சுதர்சன்
நான் இனி கவி எழுத போவதில்லை
என்று நினைக்கிறான்..!
ஆம் உண்மை தான்
என்னவள் என்னை
பொய் சொல்ல கூடாது என்கிறாளே....!!
- இரா.சுதர்சன்
Tuesday, 20 December 2011
உள்ளொன்று வெய்து புறமொன்று பேசுபவர்களை மதிக்கிறார்கள்..
மனதை திறந்து பேசினால் மிதிக்கிறார்கள்..
ஆறறிவு கொண்ட ஆட்டுக்குட்டமடா..
மன்னுலகில் மானம்கெட்ட மனிதர்கள் மிகுதியடா
மாற்றி மாற்றி பேசுவோர்க்குத்தான் மகுடமடா....!!
-இரா.சுதர்சன்
தடைகள் பல வந்தாலும் தகர்த்தெறி..
முட்டுக்கட்டை முந்நூறு வந்தாலும் முறித்தெறி..
தன்னிலை மறந்து செயல் மேல் வை உன் குறி..
எட்டாத வெற்றிக்கநியையும் ஆனந்தமாய் நீ பரி....!!
-இரா.சுதர்சன்
பிடித்தது அவள் மட்டும் இல்லை
பைத்தியமும் சேர்த்து தான்..!
அவள் உறவுகளுக்கு
என்னை பிடிக்காததினால்....!!
-இரா.சுதர்சன்
தாயின் ரத்ததில் விஷம்..!
நிலத்தடிநீர் மாசு....!!
-இரா.சுதர்சன்
எண்ணத்தின் வெளிப்பாடு செயலில்..!
காதலின் வெளிப்பாடு கவிதையில்....!!
-இரா.சுதர்சன்
நயவஞ்சகன்..!
ஒவ்வொரு முறையும்
எனக்கு வர வேண்டிய முத்தத்தை
அவனே பெற்றுக்கொள்கிறான்
கயவன் கைபேசி....!!
-இரா.சுதர்சன்
விளங்கவில்லை..!
அதென்ன
பார்வையில் குருட்டுப்பார்வை....??
-இரா.சுதர்சன்
Sunday, 18 December 2011
எதிலும் வெற்றிபெருபவன் கூட
எளிதில் தோற்றுப்போவான்..!
பெண்ணின்
போலியான புன்னகையில்....!!
-இரா.சுதர்சன்
வெயில் கண்ட பனியைப்போல
உன்னை கண்டால் போதும்
என் இதயம்
உருக ஆரம்பித்துவிடுகின்றது...!!
-இரா.சுதர்சன்
பெண்களுக்கே உரியது
என்று நினைத்து கொண்டிருந்தேன்..!
நீ என்னை
ஒரைக்கண்ணில் பார்த்த போது
என் தலையை கவிழ்த்தியப்பிறகு தான்
எனக்கு புரிந்தது ஆண்களுக்கும் வரும்
இந்த வெக்கம் என்று....!!
-இரா.சுதர்சன்
கண்டேன்
அவள் கண்கள் பேசும்
கூரான வார்த்தைகளை..!
கோபமாம்....!!
- இரா.சுதர்சன்
இக்கால மனிதன்
ஒன்று, இரண்டு ருபாய் போய்
ஐம்பது நூறை சில்லறை என்றான்..!
குணம் இருந்த மனிதர்கள் போய்
பணத்தை மட்டும்
பார்த்து பார்த்து
அவனே சில்லறை ஆனான்....!!
-இரா.சுதர்சன்
Saturday, 17 December 2011
கவிதை எழுத தெரியாத எனக்கு
அவள் நினைவைக்கொண்டு
எதை கிறுக்கினாலும்
கவிதை என்கிறார்கள்....!!
-இரா.சுதர்சன்
கல்லில் வடித்த
சிற்பத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை
கல்லான உன்மேல் வை..!
உன்னை நீயே வடி
வடிப்பதனைத்தும்
சிற்பத்துக்கு மேல்
அழகாக இருக்கும்....!!
- இரா.சுதர்சன்
என்னவள்
ஒரு களவாணி போல..!
நான் எதிர்பாராத நேரத்தில்
சட்டென்று
என் இதயத்தை
திருடி சென்றுவிட்டால்....!!
- இரா.சுதர்சன்
அலங்கோலம் கூட
அழகான கோலம் தான்..!
அது என்னவள் கையால்
அவள் வீட்டு
வாசலில் இடும் போது
அறிந்து கொண்டேன்....!!
- இரா.சுதர்சன்
அங்கே கற்சிலைக்கு பூஜை முடிய,
கோவில் மணியின் ஒலி கேட்டதும்
வெகுண்டெழுந்து புறப்பட்டால் என்னவள்..
ஆத்திரத்தில் அதட்டினேன்
கற்சிலைக்கு கும்பிடு போட
இத்தனை அவசரமா என்று..
விளங்க வைத்தால் என்னவள்
வெள்ளிக்கிழமை வடையும் சுட சுட
சர்க்கரை பொங்கலும் தருவார்களாம்..
சந்தோசம்
என்னவளும் என்னை போல தான் என்று....!!
- இரா.சுதர்சன்
ஆம் நீ சொன்னதுபோல
குரங்கு தான்
நான் இல்லை என் மனம்..!
உன்னை கண்டால் போதும்
செய்வதறியாது அங்கும் இங்குமாய்
தாவி துள்ளிக்குதிக்கின்றதே....!!
- இரா.சுதர்சன்
யார் சொன்னது
ஒரே நேரத்தில்
இரு வானவில் தோன்றாதென்று..!
தோன்றிவிட்டதே
அதுவும் ஒற்றை நிறத்துடன்..
என்னவளின் புருவங்களாய்....!!
-இரா.சுதர்சன்
இரு வரிக்கவிதை..!
புன்னகை பூவாக
அவளின் இதழ்கள்....!!
-இரா.சுதர்சன்
பெண்ணே நீ என்ன பேருந்தா..!
பயணசீட்டின் விலை அதிகரிப்பது போல
உன் மேல்
நான் கொண்ட காதலும்
அதிகரித்து கொண்டே போகிறது....!!
- இரா.சுதர்சன்
Friday, 16 December 2011
நீ பார்க்க
பச்சிலையும் பற்றி எரிய
நான் மட்டும் பற்றாமல் இருப்பேனா..!
பார் உன்னால் நான்
காதல் தீயில் பற்றி எரிவதை....!!
- இரா.சுதர்சன்
பெண்ணே
உன் கண்ணென்ன
கண்ணா இல்லை
கார்பைடு கல்லா ?
உன் கண்களை பார்த்ததும்
கல்லாய் இருந்த என் இதயம்
பட்டென்று பழுத்துவிட்டது....!!
- இரா.சுதர்சன்
நீ மறுத்து விட்டாலும் ..!
வெட்ட வெட்ட
வளரும் நகம் போல
உன்மேல் என் காதல்
வளர்ந்து கொண்டே தான் போகிறது....!!
- இரா.சுதர்சன்
காற்றையும்
சிறை வைக்க கற்றுக்கொண்டேன்..!
என்னை தவிர உன் மூச்சுக்காற்றை
யாரவது சுவாசித்து விட்டால்....!!
- இரா.சுதர்சன்
நீ மட்டும் இல்லை
என் பேனாவும் காகிதமும்
சேர்ந்து திட்டுகிறது ..!
கவிதைக்கே கவிதையா என்று....!!
- இரா.சுதர்சன்
என் தமிழ்த்தாய் மக்களே....
இன்னும் இப்படியே இருக்க போகிறோமா ?
அநியாயம் கூட நியாயமாகும்
சத்தும் போட்டுத்தான் பார்ப்போம்
என்று நம் கேரளத்து நண்பர்கள்
ஒன்று கூடி குரல் எழுப்புகிரார்களே..
நியாயத்தை வைத்துக்கொண்டு
நாம் ஏன் தான் ஊமையாய் இருக்கின்றோமோ..
இடுக்கி அணைக்கு நீர் வேண்டி
தமிழர்களை இலுச்சவாயன் ஆக்கப்பார்கின்றர்கள்..
தமிழர்கள் நாம் பொருத்தது போதும் பொங்கி எல வேண்டாமா..
ஒன்று கூடுவோம் உரிமைக்காக போராடுவோம்.....!!
- இரா.சுதர்சன்
Thursday, 15 December 2011
பெண்ணே..
புவி ஈர்ப்பு விசையில்
விழுந்தேனோ இல்லையோ..
உன் விழியீர்ப்பு விசையில்
விழுந்து விட்டேன்....!!
- இரா.சுதர்சன்
என் பெருமூச்சு பெருக்கெடுத்து
என்னுடல் போர்தொடுக்க
துணிந்து விடுகிறது..
என்னவள் அழகை கண்டு
ஆச்சிரியப்படும் எதிரிகளின்மேல்..!
ஹோ
இதற்க்குப்பெர்யர் தான் பொறாமையோ....!!
- இரா.சுதர்சன்
Wednesday, 14 December 2011
தேவதைகளுக்கு பூமி வர
அவசியமில்லையாம்..!
அவர்கள்
அனைவருக்கும் பதிலாக
என்னவள் ஒருத்தி போதுமாம்....!!
- இரா.சுதர்சன்
மேஜைக்கு மேல் வாதாடி
மேஜையின் கீழ் வாணிபம்
லஞ்சம்....!!
- இரா.சுதர்சன்
Tuesday, 13 December 2011
நம்பினார் கைவிடப்படார்..!
வேண்டாம்
நம்பி நம்பி
புரிந்துகொண்டேன்
நம்பிக்கை துரோகிகள் பற்றி....!!
- இரா.சுதர்சன்
நம் தேவை
கிடைக்கவில்லை
போராட்டம்
உரிமைக்காக
தடியடி
ஜனநாயகம்....!!
- இரா.சுதர்சன்
Monday, 12 December 2011
காலை, இரவு , பகல் மூன்றை தவிர இன்னொரு பொழுது இருந்தால் நன்றாக இருக்கும் அப்போதும் உன்னையே நினைக்க....! - இரா.சுதர்சன்
படிப்பில் முட்டையாம்
ஆசானிடம் அனுப்பாமல்
ஆசாமியிடம் அனுப்புகிறார்கள்
தோஷம் நீங்கி டாப்பாகா வருவானாம்..!
பதரே
தோஷத்தை பாராமல்
தியேட்டர் வாசலில் இருக்கும்
அவனை பார்
மூடத்தனத்தை நம்பி
வரும் தலைமுறையையும் மூடன் ஆகாதே....!!
புரிந்ததா....
- இரா.சுதர்சன்
உடம்பெல்லாம் வலி ..!
எத்தனை முறை தான் சொல்வது உனக்கு
நான் உன் நிழல் என்று....!
இது புரியாது உன்னை கோவிலுக்கு யார் போக சொன்னது எத்தனை பேர் மிதித்தார்கள் தெரியுமா ?
- இரா.சுதர்சன்
Saturday, 10 December 2011
தந்தை உடலை தந்து
தாயோ உயிரை தர
ஆசான் வளர்க்க நீ வந்தாய்..!
அடே நண்பா உன்னுடன்
எங்கிருந்துதான் வந்தது
இந்த ஜாதியும், மதமும்
மறந்து விடு மறக்க விடு....!!
- இரா.சுதர்சன்
உன் வாயும் திறக்கவில்லை
என் காதிற்க்கும் எட்டவில்லை..!
ஆஹா என்ன இனிமை - உன்
கண் பேசும் மௌன மொழி....!
- இரா.சுதர்சன்
Friday, 9 December 2011
புரியவில்லை..!
மையிற்கு ஏன் தான் அழகு சேர்க்கிறாலோ
அவள் கண்களில் இட்டு....!!
- இரா.சுதர்சன்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல..!
சரி தான்
என்னவள் தான் வைரம் ஆயிற்றே....!!
- இரா.சுதர்சன்
Thursday, 8 December 2011
பெண்சாதி
பெற்றெடுக்கும் பிள்ளை
பெண் பிள்ளையாக
வேண்டாமென்று வேண்டுகிறான்
பெண்தெய்வமாம் பார்வதியிடம்....!!
- இரா.சுதர்சன்
மலரபோகும் மொட்டிற்கு
வேர்களினாலேயே மரணமாம்..!
பெண் சிசு கொலை....!!
- இரா.சுதர்சன்
நரகத்தில் இல்லை
ஆனாலும்
நரக வேதனை
காதல் தோல்வி....!!
- இரா.சுதர்சன்
Saturday, 3 December 2011
அவள் பின்னால் அலைந்து
முகவரியை இழந்த எனக்கு
அவளால் கிடைத்த முகவரி
என் கன்னத்தில்..!
அவள் கை விரல்களின் வரிகளாக....!!
- இரா.சுதர்சன்
Friday, 2 December 2011
பூக்கள் அனைத்தும்
தற்கொலை செய்து கொள்கின்றனவாம்
வாடி உதிர்ந்து..!
என்னவள் தலை ஏறா சோகத்தில்....!!
- இரா.சுதர்சன்
Tuesday, 29 November 2011
என் இதயதில்
உன்னை வைக்கவே
பயமாக இருக்கிறது..
என் இதய துடிப்பில்
உன் இரவு தூக்கம் களைந்து விடுமோ என்று..!!
- இரா.சுதர்சன்
இதய கூட்டில் எழுதி வைத்தேன்
யாருக்கும் இடம் இல்லை என்று..
இருந்தும் உள்ளே நுழைந்தாய்
எனக்கு படிப்பறிவு இல்லை என்று....!!
- இரா.சுதர்சன்
பூவிளிருந்தும் புயல் காற்று..!
என்னவளின் கோவ பெருமூச்சு....!!
- இரா.சுதர்சன்
Monday, 28 November 2011
பூக்கள் கண்ணீர் சிந்துமா ?
சிந்துகின்றது..
உன் தலை ஏறா சோகத்தில்..
அதிகாலை
பனித்துளியின் உதவியுடன்....!!
- இரா.சுதர்சன்
முந்தி முந்தி போனான்
முன்னேற
முந்தி தான் போனான்
மரண படுக்கைக்கு..!
மித வேகம் மிக நன்று....!!
- இரா.சுதர்சன்
Sunday, 27 November 2011
பெண்னே..
உண்மையில் நீ ஒரு கள்ளி தான் - ஆம்
உன்னை துரத்தி துரத்தி காதல் செய்ததற்க்காக
ஒரு பார்வையில் என்னை கொலை செய்யும்
காதல் கள்ளி..!
- இரா.சுதர்சன்
Saturday, 26 November 2011
நான்
விரும்பியதெல்லாம் அதிதூரத்தில்..
நினைவறிவதர்க்கு முன் நிலா....
நினைவறிந்த பின் நீ....!!
- இரா.சுதர்சன்
Friday, 25 November 2011
நான் எழுதியது வார்த்தைகள் தான்
ஆனால் அதை
நீ வாசிக்கும் போது மட்டும்
கவிதயகிவிடுகிறது ஏனோ....!!
இது தான் காதலா ??
- இரா.சுதர்சன்
கருப்பு நிலவை பார்த்தேன்
ஒன்றல்ல இரண்டாய்
பார்த்ததும் ஈர்க்கப்பட்டேன்
காந்ததிடம் இரும்பை போல..
அடடே
என்னவளின்
இரு கருவிழிகளா அது....!!
- இரா.சுதர்சன்
மின்னல் சிரிக்க
இடி கைகொட்ட
மேகம் மட்டும் ஏன் தான்
கண்ணீர் சிந்துகின்றதோ..
அனந்த கண்ணீராய் இருக்கும் போல - பின்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் நடந்தால் !!
- இரா.சுதர்சன்
என்னவளே
கொஞ்சம் மெதுவாய் நட..
என்னை அறியாமலே
என் இதயம்
சுரம் பாட ஆரம்பித்துவிடுகிறது !!
உன் கால் கொலுசொலியின் ஜதி கேட்டு......
- இரா.சுதர்சன்
Tuesday, 22 November 2011
நிலா........
உடைந்து
உதிர்ந்திருக்கும் போல !
பின் அவள் எப்படி
பூமியில்......!!
-இரா.சுதர்சன்
போலியாக நான் !!
என்னவள் அவளுள்
என்னை காண்கிறாலாம்
காதல் கண்ணாடியில்.....!
-இரா.சுதர்சன்
Monday, 21 November 2011
புரியாத
புதிராய்..
நீ
நான்
ஜாதி
மதம்
மொழி,,,,,
கலை
நிலை
மனிதனை
மனிதனாய்
பார்
பாரில்.......
- இரா.சுதர்சன்
Sunday, 20 November 2011
கவிதையே
என் கவிதையை
ரசிக்கின்றது..
கவிதைக்கு காரணம்
யார் என்று புரியாது....
-இரா.சுதர்சன்
முதல் முறையாய்
மின்சாரத்தை உணர்ந்தேன்
என்னவள் மின்னல் பார்வையில்..
அருகில் இருந்த அவள்
தோழியை பார்த்ததற்கு.....
ஹும்ம் எவ்வளவு பொறாமை ..
-இரா.சுதர்சன்
Saturday, 19 November 2011
ஏ பெண்ணே !!
உன் கண் என்ன காந்தமா ?
திசை காட்டிக்கூட
உன்னையே காண்பிக்கிறது....
- இரா.சுதர்சன்
ராகமில்லை தாளமில்லை
ஆனாலும்
ரசிக்கின்றான் - அலுவலகத்தில்
ஏற்ற இறக்கத்துடன்
உண்ட மயக்கத்தில்
மதிய தூக்கம்....!!
- இரா.சுதர்சன்
ஐயோ !!
என்ற சத்தத்துடன்....
சொர்கத்துக்கு செல்லும் வழியில்
திடிர் தடங்கல்..
தலையில் குட்டு
ஆசிரியரின் கையில் ,
வகுப்பு நேர தூக்கத்தில்
மண்டை வலியுடன்
மாணவன்....!!
- இரா.சுதர்சன்
Friday, 18 November 2011
பலரிடம் சில
பொய்களை சொன்னேன்
அதற்காக என் மனம்
ஒரு போதும் ஏங்கவில்லை..
ஆனால்உன்னிடம்
ஒரே ஒரு உண்மையை
சொல்ல முயற்சிக்கிறேன்
முடியவில்லை
மன ஏக்கத்துடன்......
- இரா.சுதர்சன்
கூட்டி கூட்டி பார்கின்றேன்
கூடவில்லை
கழிந்துதான் போகிறது
வருத்தத்தில்.....
வீட்டின் மூலையில் துடைப்பம்
- இரா.சுதர்சன்
Thursday, 17 November 2011
கண்கள் தீண்டி மனது பேசும் பாசை காதல்..
உடல் தீண்டி வாய் பேசும் பாசை காமம்.....
- இரா.சுதர்சன்
Wednesday, 16 November 2011
சோர்வினை களைந்து
சோகத்தினை மறந்து
நிம்மதி பெருமூச்சை விட்டு
நாளை வரும்
நலனை எண்ணி
நன்றாய் கண்ணுறங்கு
நல்ல கனவுகளுடன்
இரவின் மடியில்
இனிய இரவு..........
- இரா.சுதர்சன்
தரிசு நிலத்தில்
அமோக விளைச்சல்.....
காதல் உரத்தை
போட்டு
என் கண்ணீரை
நீராக மாற்றி - என்னவள்
வளர்க்க வைத்த
தாடி........ :-(
- இரா.சுதர்சன்
புத்தம் புது மொழி
புரியாத மொழி
தேன் போல சுவையாய்
கேட்க கேட்க சுகமாய்
மனதில் கள்ளமில்லா - இந்த
மழலையின் மொழி.......
- இரா.சுதர்சன்
Tuesday, 15 November 2011
சந்தேகத்தை உருவாக்கி
உயிரையும்
பிடுங்கவைத்துவிடுகிறான்
இந்த கயவன்
கைபேசி.......
- இரா.சுதர்சன்
முட்டி மோதி பார்கின்றேன்
எட்டு திக்கும் சுழல்கின்றேன்
விடுதலை வாயில் எங்கே என்று..!
ஏக்கத்துடன் கடிகார முற்கள்....!!
- இரா.சுதர்சன்
Monday, 14 November 2011
மனதில்
காதல் கோட்டையை
கட்டாதீர்கள் - ஏனென்றால்
ஒவ்வொரு கட்டிடத்துக்கும்
ஒரு எக்ஸ்பயர் டேட் உண்டு ;-)
- இரா.சுதர்சன்
இக்கால இளைஞர்கள் சிலர்
கிளியையும் கோலையும் கொண்டு
தங்களின் எதிர்காலத்தை கணிக்கிறார்கள்
நல்லது - அப்படியே
கலாமிற்கு கணித்துசொல்லுங்கள்
2020 இல் இந்திய
வல்லரசு ஆகுமா என்று....!!
- இரா.சுதர்சன்
அவர் காட்டுகிறார் பாரபட்சம்
பிறப்பு முதல் இறப்பு வரை......
பாரபட்சம் காட்டாதவர்களை
அவர் என்கிறார்கள் - ஆனால்
அவரை மட்டும் தான்
பாரபட்சம் இன்றி பார்க்க முடிந்தது
இன்றோ
அதற்கும் பெயரிட்டார்கள்
பொது வழி, சிறப்பு வழி என்று....
அவர் இருக்கிறார் எனில்
அனைத்திலும் பாரபட்சம் எதற்கு ??
இல்லை என்றால் அவர்களுக்கு
வீதி தோறும் விடுதிகள் எதற்கு ????
- இரா.சுதர்சன்
Saturday, 12 November 2011
சூரியனை ராவிலும் உறங்க விடாமல் திக்காட செய்து ஹைக்கூ எழுத வைத்தவள் இந்த தேவதை.... - இரா.சுதர்சன்
பூவிற்கு கூட
தலை கணம் -ஆம்
அவள் பின்னல் நான்
அலைவதை பார்த்து
இதழ் விரித்து சிரிக்கிறது....!!
ம்ம்ம்ம்
- இரா.சுதர்சன்
முகத்தை காட்ட
மறுக்கிறார்கள் - ஆனால் அவர்கள் முகபுத்தகத்தின் (face book) உறுப்பினர்கள்....!!
லஞ்சம் வாங்கிய உத்தமன் போல ;-) ஏன் தா இப்புடி பண்றீங்களோ !! - இரா.சுதர்சன்
என்னதான் ஆனந்தமோ
பூமித்தாய்க்கு இப்படி
வாய் விட்டு சிரிக்கின்றால் - மனிதன்
உயிர் விட்டு போக
நிலநடுக்கமாய்....!
- இரா.சுதர்சன்
Friday, 11 November 2011
விண்மீன் என பறிக்க சென்று
வாங்கிக்கட்டிக்கொண்டேன் என்னவளிடம்
அது அவளின் கண்கலாம்.......
ம்ம்ம்ம்ம்ம்ம்
- இரா.சுதர்சன்
கடவுள்தெரிந்தேவைத்தான்
ஒருதிருஷ்டிபொட்டு - நிரந்தரமாய்
என்னவள்நெற்றிஓரமச்சம்....!!
- இரா.சுதர்சன்
Thursday, 10 November 2011
யோகியனயும் அயோகியனாக்கிவிட்டது
இந்த காதல் - ஆம்
என்னவளின் இதயத்தை திருடவைத்து
எனையோர் திருடனாக்கி....!!
- இரா.சுதர்சன்
நாள் முழுவதுமாய்
ஓடிப்பார்க்கிறேன் முன்னேறுவதற்காக
முடியவில்லை.....
முனங்கள் சத்தத்துடன்
மின்விசிறி....!!
- இரா.சுதர்சன்
Wednesday, 9 November 2011
இமைகளே
கண்களை காயப்படுத்துகின்றன,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவைத்து.....
(இமைகளாக பிள்ளைகளும், கண்களாக பெற்றோர்களும்)
- இரா.சுதர்சன்
அளவில்லாமல் நேசித்தேன் - ஆம்
அனுபவிகின்றேன், மறந்தேன்
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென்று..!
- இரா.சுதர்சன்
Tuesday, 8 November 2011
காதலித்தேன்
கவிஞனானேன்
கண்ணீர்கலந்த
கவிதைகளுடன்....
- இரா.சுதர்சன்
உண்மைதான் - அவள்
நினைவில் நான்
கிறுக்கும் கிறுக்களைகூட
கவிதை என்கிறார்கள்..!!
- இரா.சுதர்சன்
Monday, 7 November 2011
நுரையீரலை மட்டும் அல்ல
ஓசோநயும் ஓட்டையாகத்தான்,
இழுக்க இழுக்க ஆனந்தம்
இறுதிகட்டம் ஆரம்பம்,
சிறிது சிறிதாய்
சிதைக்கும் சிகரேட்
கேன்சர் ஜாக்கிரதை.....!!
- இரா.சுதர்சன்
Sunday, 6 November 2011
பொய்களின் பிறப்பிடம் - கற்பனை
கற்பனைகளுக்கு காரணகர்தா - காதல்
காதலின் ஆரம்பம் - முற்றும்
முற்றிலும்....!!
- இரா.சுதர்சன்
Saturday, 5 November 2011
கண்களால் செய்யாதே - ஒரு நாள் அதே கண்களால் வடிப்பாய் அர்த்தமின்றி.....!! - இரா.சுதர்சன்
Monday, 31 October 2011
என்ன ஓர் அதிசியம்....
அமாவாசை இரவில் நீளமான நிலா !!
அடடே....
என்னவளின் கார்கூந்தலில் மல்லிகைப்பூ....!!
- இரா.சுதர்சன்
அதிசயம் .... பல முறை இறந்தும் ., உயிருடன் இருக்கிறேன் ..