Monday, 11 November 2013

பெறப்போகும் வெற்றியை மட்டும் எதிர் நோக்கிப் போ....!

Wednesday, 2 October 2013

நாவில் இனிக்கிறது
என் கண்ணீர் துளிகள்..!
ஆனந்தக் கண்ணீர்....!!

- இரா.சுதர்சன்

Thursday, 8 August 2013

நான் என்ன கிறுக்கனா..!
உன்னை
ஓயாமல் காதலித்து
இப்படி கவிதையென்ற பெயரால்
கிறுக்குவதற்கு....!!

- இரா.சுதர்சன் 

Wednesday, 7 August 2013

ஜலபுலஜங்க்ஸ், டிக்கிலோனா போன்ற ஆட்டங்கள் விளையாடலாம் என்று எண்ணி டெல்லி சென்று ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்...... :p

# ஒன்ஸ் அபான் எ டைம் இன் டெல்லி..... அவ்வ்வ்வ்வ்வ்வ் 

Tuesday, 6 August 2013

மறையும்வரை.......
மனிதன், மனிதனாக மாற மட்டும் முயற்சிப்பதேயில்லை......!!

Monday, 5 August 2013

ஒருவனுக்கு சாகுமளவிர்க்கு துணிவிருந்தால், 
அவன் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்......
பணமிருக்கும் பட்சத்தில் !!

# மணி மேட்டர்ஸ் !!!!!!

Tuesday, 9 July 2013

இன்னனும் அரை தூக்கத்தில் தலைவலிக்கு தைலம் தேடும் நண்பனுக்கு மட்டும்மே தெரியும்.....   மிக்சிங் எவ்வளவு முக்கியம் என்று !!
ஆறு மணிக்கு அடுச்ச அலாரத்த நிப்பாடிட்டு ஒரு பத்தே பத்து நிமிசம் தூங்கிட்டு கண்ணு முலுச்சு பாத்தா மணி எட்டு நாப்பது 
‎#ம்ம்ம்ம்ம் கொடுமை......!

இனிய காலை வணக்கம் நண்பர்களே........
ஆணாய்  இருப்பதாலோ என்னவோ என்னால் வலியின் வேதனையில் வாய்விட்டு அழ கூட முடிவதில்லை மீண்டும் ஒரு அடைமழையை எதிர்பார்த்து நான்  !!

Saturday, 29 June 2013

காதல் தோல்வியின் வலியை கூட தாங்கி விடலாம் போல....
இன்ட்ரஸ்டா  படம் பாத்துட்டு இருக்கும் போது ஒரே இடத்துல திரும்ப திரும்ப கொசுக்கடிக்குற வலிய தாங்கக முடியல !!

கடைக்கு போய் ஊதுபத்தி பத்த வைக்க ஒரு தீபட்டியும், தயிருக்கு கடுச்சுக்க ஒரு சிப்ஸ் பக்கெட்டும் வாங்கிட்டு வந்தது ஒரு தப்பா ? !!

# சனிக்கிழமனு சொன்னாலே ஒரு சந்தேக பார்வையாதான் பாக்குறாங்கயா ;-) :p 

ஹாப்பி வீக்என்டு ப்ரெண்ட்ஸ்.........

Friday, 28 June 2013

நாகரீக மாற்றம் என்ற பெயரில் அவ்வப்போது அநாகரீகம் அடியெடுத்து வைக்கிறது.......!

# நி(சு)தர்சனம்

Thursday, 27 June 2013

எங்கள் அலுவலக வாகன ஓட்டுனர் ( கிட்ட தட்ட என் வயசு ), இரவு பணியில் (அதாவது இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ) ஒரு சிறிய கடையருகே வண்டியை நிறுத்திவிட்டு தமிழக அரசால்  தடை செய்யப்பட்ட ஒரு பாக்கை (2 பாக்கெட்டு) வங்கி வாயில் போட்டு மென்று கொண்டே வண்டிய கிளப்புனாறு, நானும் கவர்மெண்டே பாக்கு போட்ட கேன்சர் வருதுன்னு தடை பன்னிடுச்சு பத்தாததுக்கு சினிமா தியேட்டர்ல என் பேரு முகேஷ் பாக்கு போட்டு போட்டு எனக்கு வாய்ல கேன்சர் அது இதுனு காமிக்கிகுறான், இப்புடியே  பாக்கு போட்ட கொஞ்ச நாளுல கேன்சர் வந்து செத்துருவையா இதெல்லாம் போடாதனு சொன்னேன்..... கொஞ்ச சைலெண்டா இருந்துட்டு சொன்னான், சார் இப்ப இது போடாட்டி வண்டி ஓட்ட ஓட்ட எனக்கு தூக்கம் வந்துரும்.... அப்புடி வராது இன்கேஸ் வந்தா கொஞ்ச நாள் இல்ல இப்பவே போகவேண்டியது தா, அதுவு வண்டில நான் மட்டு இல்ல  நீங்க வேற இருக்கீங்கனு சொன்னான்.....

#  என்னா பேசறதுன்னு தெரியாம வாய மூடிகிட்டு உக்காந்துட்டேன் எல்லாம் நேரம் ஹும்ம்ம்ம்ம்ம் !! 

Wednesday, 26 June 2013

லோகத்துல மழைக்கு வேண்டி எதேதோ யாகம் வளர்துறேலே சத்த அது கூட பத்து மரத்தையும் சேர்த்து வளதுப்பாருங்கோ., யாகம் மழை தர்றதோ இல்லையோ மரம் கண்டிப்பா தரும்....!!

மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம்.......

Thursday, 20 June 2013

சில சமயங்களில் கடவுளை கூட சபிக்கத்தான் தோன்றுகிறது, ஆயினுமோர் நல்ல விசயம் தன்னம்பிக்கை துளிர தூண்டுகோலாய் இருப்பது.......!!

Wednesday, 19 June 2013

சில சமயங்களில் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க முடியாமல், நானும் பச்சையான வார்த்தைகளை முனு முனுதுக்கொண்டே போய்விடுகிறேன்......!!
எவன் ஒருவன் நமக்கு சாதகமாக ஒரு செயலை செய்கிறானோ, நம் தவறுகளை தட்டிக் கேட்காமல் விட்டு விடுகிறானோ நாம் செய்யும் செயலைப் பார்த்து  இது மட்டுமே சரி என்று நம்மை புகழ்கிறானோ,,
அவன் மட்டுமே நம் கண்களுக்கு நல்லவனாய் தெரிவான்....!!

# நி(சு)தர்சனம்..

Tuesday, 18 June 2013

அடடே..!
உன்னை பார்த்துக் கொண்டே இருந்தால்
நேரம் வேகமாக சென்று விடுகிறதென்று
இப்போதெல்லாம் என் கை
கடிகாரத்தைக் களைந்து விடுகிறது....!!
-இரா.சுதர்சன் 

Friday, 14 June 2013

பாவம் என்னை கடிக்க வரும் கொசுக்களுக்கு தெரியவில்லை நாளை அதுகளுக்கு மில்க் என்று........

ஹேவ் எ கொசுக்கடி நைட் !! அவ்வ்வ்வ்வ்வ்வ்

Tuesday, 21 May 2013

நீ எல்லோராலும் விரும்பப்படுபவனாக இருக்க வேண்டுமென்றால் ஒரே வழி தான் உண்டு, மற்றவர்களை பற்றி இழிவாக பேசாமல் இருப்பது தான் அந்த வழி..........
-யார் சொன்னால் என்ன  !!

இனிய காலை வணக்கம் நண்பர்களே..........

Saturday, 4 May 2013

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD


Alt + 0153..... ™... trademark symbol

Alt + 0169.... ©.... copyright symbol

Alt + 0174..... ®....registered ­ trademark symbol

Alt + 0176 ...°......degre ­e symbol

Alt + 0177 ...±....plus-or ­-minus sign

... Alt + 0182 ...¶.....paragr ­aph mark

Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths

Alt + 0215 ....×.....multi ­plication sign

Alt + 0162...¢....the ­ cent sign

Alt + 0161.....¡..... ­.upside down exclamation point

Alt + 0191.....¿..... ­upside down question mark

Alt + 1.......☺....sm ­iley face

Alt + 2 ......☻.....bla ­ck smiley face

Alt + 15.....☼.....su ­n

Alt + 12......♀.....f ­emale sign

Alt + 11.....♂......m ­ale sign

Alt + 6.......♠.....s ­pade

Alt + 5.......♣...... ­Club

Alt + 3.......♥...... ­Heart

Alt + 4.......♦...... ­Diamond

Alt + 13......♪.....e ­ighth note

Alt + 14......♫...... ­beamed eighth note

Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)

Alt + 251.....√.....s ­quare root check mark

Alt + 8236.....∞..... ­infinity

Alt + 24.......↑..... ­up arrow

Alt + 25......↓...... ­down arrow

Alt + 26.....→.....ri ­ght arrow

Alt + 27......←.....l ­eft arrow

Alt + 18.....↕......u ­p/down arrow

Alt + 29......↔...lef ­t right arrowSee More
ஒருத்தர்  எவ்வளவு அவசரத்துல இருக்காருன்னு, அவரு பாத்ரூம் கதவ எவ்வளவு வேகமா தொறக்குராரோ  அத வச்சே அசெஸ் பண்ணிக்கலாம்......! ;-)
அவ்வ்வ்வ்வ்வ்.......
மெய்யாக இருப்பின்
உனக்கு முன்னே உன்
உயிராய் நான் இருப்பேன்....!!
-இரா.சுதர்சன்
மனிதம்.....

   நேற்று காலை சுமார் எட்டு மணி அளவில் நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் போது,  நான் சென்று கொண்டிருந்த வாகனத்திற்குப் பின்னல் ஒரு முதலுதவி வண்டி (ஆம்பூலைன்ஸ்) வந்ததை கண்டு எங்கள் வாகன ஓட்டுனர்  பேருந்து நிறுத்தம் என்பதால் வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தினர், முதலுதவி வண்டி எங்களை கடந்து செல்லும் போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடைய ஒருவரை கண்டேன் அவர் அந்த முதலுதவி வண்டியை பார்த்ததும்  பிராத்திக்க கண்டு வியந்த நான் மகிழ்ச்சியும் அடைந்தேன் காரணம் அவரை போல மற்றொரு நபரும் பிரார்த்தனை செய்தது, இதில் மகிழ்ச்சி என்னவென்றால் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். சாதி, மதம், இனம், மொழி,முகம் என்று எதைப் பற்றியும்  தெரியாத ஒருவருக்காக  அவர் விரைவில் குணம் அடைந்து வரவேண்டும் என்ற நல் உள்ளம் கொண்ட இவர்கள் மதத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனிதம் என்ற ஒன்றால் இணைக்கப்பட்டுள்ளனர் என்று....!!

-இரா.சுதர்சன்  

Monday, 29 April 2013

கல்லறை தான்
கடைசி தீர்வென்றால்,
உலகத்திற்கு பெயர்
கல்லறையாய் இருந்திருக்கும்....!!
-இரா.சுதர்சன்
உன்  முகத்தில் வியர்வையடி
காலை ரோஜாமேல் பனித்துளி போல....!!

இந்த வெயில்ல கூட இந்த மாதிரி எதாவது சொல்லியே ஆகனுமுன்னு சொல்றாங்கய.... என்ன பன்றது

Sunday, 28 April 2013

பஸ்ல போயிட்டு இருக்கும் போது என்னனு தெரியல என்னோட கை திடீர்னு என் பர்ஸ இருக்கா இல்லையான செக் பண்ணி பாத்துகிச்சு என்னடானு பாத்தா பஸ்ல "திருடர்கள் ஜாக்கிரதை"னு போர்டு வெச்சுருக்காங்க !!

ஒரு அலெர்ட் இருக்கனுமுள்ள......!!!! ;-) :p

Friday, 26 April 2013

நானும் பாக்குறேன் நான் போகும் போது மட்டும் ரோடு புல்லா டிராபிக் ஜாம், வண்டி எறும்பு மாதிரி ஊர்ந்து போக வேண்டி இருக்குது.. ஆனா ஆபோசிட் ரோடுல ட்ராபிக்கே சுத்தமா இல்ல.... என்ன கொடும சார் இது....!!


இனிய இரவு வணக்கங்கள் நண்பர்களே.........

மெயில் எதாவது வந்துருக்கானு செக் பண்ண என்னோட மெயில் ஐடிய ஓபன் பண்ணிப்பாதா காலஇங்காத்தாலே முதல் மெயிலே "இந்த புகைப்படத்தை உடனடியாக நீங்கள் 30 பேருக்கு அனுப்ப வேண்டும் அனுப்பினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் இல்லையென்றால் தப்பா எதாவது நடக்க வாய்ப்புள்ளது" அப்புடின்னு ஒரே மாதிரியா ரெண்டு மெயில் அனுப்பிசுருக்காங்க......!
ரொம்ப சிறப்பு....... நீங்கெல்லாம் நல்லாவருவீங்க டா !!

இனிய காலை வணக்கம் நண்பர்களே......!!!!

Wednesday, 24 April 2013

பக்கெட்ல இருந்த பத்து ரூவா மிஸ் ஆகிடுச்சு சேரினு விட்டுட்டேன், ஆனா மொபைல்ல மூணு ரூவா டிடெக்ட் பண்ணுனதுக்கு செம கடுபாகிடுச்சு, கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கேளு கேளுன்னு கேட்டுட்டேன் ஒரு வழிய ரீபண்ட் பண்ணிடாங்க.....
மனித இயல்போ....!
என்ன கொடும இது..!!

இனிய இரவு வணக்கம் நண்பர்களே......

Thursday, 11 April 2013

 என் இனிய நீங்கா நினைவுகள்...........

                அன்று வெள்ளிக்கிழமை, நான்காம் வகுப்பு வரலாற்றுப் பாடம்  அந்த வாரகால அட்டவணையின் கடைசி வகுப்பு.... வாரக்கடைசி என்றாலே சந்தோசம் தான் அதுவும் கடைசி வகுப்பென்றால் கேட்கவா வேண்டும், விடுமுறை நாளில் புத்தகத்தை சுமக்க தேவையில்லை, எனவே சந்தோசமாக நண்பர்களுடன்  விளையாடி  பொழுதை எப்படி கழிக்கலாம் என்றெல்லாம் மனசுக்குள் கற்பனைகளோடு நானும் என் மிக நெருங்கிய தோழனுள் ஒருவனான வருணும் ஒருவரை ஒருவர் பார்த்து பொன் மொருவல் பூத்துக்கொண்டிருந்த வேலையில், வரலாறு ஆசிரியை... நான் பாடம் நடத்திட்டு இருக்கும் போது இங்க கெவனிக்காமா அங்க என்ன சிருச்சிகிட்டு இருக்கீங்க இங்க பாடத்த கவனீங்கடா என்று கூறி திட்டக்கொண்டிருக்க , எங்களை  பார்த்து எங்களின்   நெருங்கிய தோழியான தீபா பேசாம உக்காருங்கடா என்றால்,  மீண்டும் பாடத்தை தொடர்ந்தார் ஆசிரியை சித்ரா , காலையில் இருந்து வேகமாக நகர்ந்த கடிகார முட்கள் அப்போது மட்டும் ஏனோ மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தது, சற்று நேரம் கழித்து நானும்,வருனும் மற்றொரு நண்பன் அசோக்குடன் சேர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தோம் அதுவும் அந்த வகுப்பே எங்கள் பக்கம் பார்க்கும் படி எங்கள் ஆசிரியையின் சத்தத்திற்க்கும்  சற்று சத்தமாகவே பேசிக்கொண்டிருந்தோம், சற்றே எதிர்பாரத அளவிற்கு கோபம் கொண்டார் ஆசிரியை சித்ரா, என்னெனில் அவர் அதிகமாக கோபம் கொல்லாத ஆசிரியை, எங்கள் மூவரையும் அழைத்து எங்களை அடிக்க மேஜை டிராவில் வைத்திருந்த அடிக்கோலை தேடினார்., நான் என் தோழியை பார்க்க அவளோ நல்லா மாட்டுனியஅடி வாங்கு அடி வாங்கு என்று கூறி சிரித்தால், நண்பர்கள் அசோகும் வருணும் பயந்துக் கொண்டிருக்க  நான் மட்டும் சற்று தைரியமாக இருந்தேன் , அன்று மதியம் எங்கள் மதிய உணவு இடைவேளையின் போது அந்த அடிக்கோலை பள்ளியின் அருகே இருந்த சாக்கடைக்குள் நான் தூக்கி எறிந்த தைரியம் தான் அது, அடிக்கோல் கிடைக்காமல் வகுப்பு தலைவனான (லீடர் ) என் மற்றொரு நண்பன் மோகனை மோகன் இங்க இருந்த ஸ்கேல் எங்க போச்சு என்று வினவ மோகனோ தெரிலிங்க மிஸ் அங்க தான் இருந்துது என்றான், சித்ரா சற்றே தலையை அருகில் இருந்த மற்றொரு வகுப்பை பார்த்தார் அங்கு இசைவாணி எனும் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்தார், வாணி மிஸ் கொஞ்சம் ஸ்கேல் தாங்க என்றார் சித்ரா , உடனே கடைசி வரிசையில் மணிமேகலை,    டீனுப்ரிய, நந்தினி ஆகிய மூவரும் ஒன்றாக ஸ்கேலை வாங்க எழுந்திரிக்க வாணி மிஸ்சோ  நந்தினியை அலைத்து  இந்த நந்தினி இந்த ஸ்கேலை சித்ரா மிஸ் கிட்ட குடு என்றார் ஸ்கேலை தந்தனிப்பினர் அன்று நாங்கள் மூவரும் வாங்கிய அடி வருண், அசோக்கிற்கு இப்போது எப்படியோ  ஆனால் இன்றளவும் என்னால் மறக்க முடியாத ஒன்று காரணம் என் நெருங்கிய தோழி  தீபாவும் வருத்தப்பட்டது தான்....
சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்றேன், டேய் ஹோம் வொர்க் முடுசுடியா  டா  என்று என்னை பார்த்து கேட்டவளிடம் இல்ல தீபா  கொஞ்ச எழுதி தா டி  என்று உரிமையுடன் கேட்க மறு பேச்சு பேசாமல் எழுதி தந்தாள் தீபா, இதை அறிந்த வாணி ஆசிரியை தீபாவை நன்றாக அடி சாத்துவார் என நினைத்தேன் ஆனால்  தீபா பள்ளியிலே சிறந்த மாணவி எனவே இதா கடைசி இனிமே இப்புடி எல்லாம் பண்ணக்கூடாது சரியா என்று தீபாவுக்கு  புத்திமதி கூறி அனுப்பினர் ஆனால் என்னை அழைத்து பிரின்சிபல் ரூமுக்கு போ என்றார் வாணி மிஸ் நானும் சென்றேன் அங்கே பள்ளியின் முதன்மை ஆசிரியர் ஆறுச்சாமி கையில் குச்சியுடன் என்ன தம்பி  ஹோம் வொர்க் பண்ண மட்டேன்குற கிளாஸ்ல ரொம்ப குறும்பு வேற பன்றியாம என கூறியவரே என்னை ஒரு அடி அடிக்க சித்ரா, இசைவாணி இரு ஆசிரியர்களும் வந்து சார் கிட்ட இனிமே இப்புடி பண்ண மாட்டேனு சொல்லு என்றனர் நானும் அடியில் இருந்து தப்பிக்க அப்படியே கூற தீபா கதவோரம் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்தால், வெளியே வந்ததும் என்னிடம் வலிக்குதா என்று அவள் கேட்டது இன்றளவும் என் காதுகளில் இனிமையாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது..!!
ஐயிந்தம் வகுப்பு முடித்த நிலையில் அந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளி, கல்லூரி என மாறியதால் அவர்களுடனான தொடர்பு அறவே இல்லையெனினும்  கூட (வருண் தவிர ) அவளைப்போல ஒரு தோழியும், இவர்களை போல நல்ல நண்பர்கள், சித்ரா,இசைவாணி போன்ற ஆசிரியர்கள் இன்றளவும் கிடைக்கவில்லையே என்று நினைக்கும் பொழுது சற்றே மனம் நெருடத்தான் செய்கிறது :'( :(...............

பள்ளி வாழ்க்கை...... அதுவும் ஆரம்பப்பள்ளி வாழ்க்கை.... நினைக்க நினைக்க அடிநாக்கில் அடைகாத்த இனிப்பை போன்றே இனிமையாகத்தான் இருக்கிறது.............!!!!!!!!

-இரா.சுதர்சன்

Saturday, 30 March 2013

உலகம்..

செய்ததை நன்றென்று சொல்ல
இருவர் இல்லையெனினும்
கவலைப் படாதே..!
பிழை சொல்ல
மூவர் இருப்பார்கள்....!!
-இரா.சுதர்சன்

Saturday, 16 March 2013

பொய்யான வாழ்க்கை
வாழும் இந்த பூவுலகில்..
மெய்யாக இரு
உனக்கு மட்டுமாவது....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 13 March 2013

நெருங்கும் போது
விலகி செல்லும் நீ..
விலகி நின்று
உன்கண்களால் மட்டும்
நெருங்குவதேனோ....!!
-இரா.சுதர்சன் 
பருவநிலையை போல 
இந்த காதலும் 
மாறித்தான் வருகின்றது..
தெளிந்த இதய அறையில் 
ஆரம்பித்தது அன்று..!
இருட்டு சுவற்றறையில் இன்று....!!
-இரா.சுதர்சன் 

Saturday, 2 March 2013

தவறுகள் தவறில்லை
தவறுகளை தவிர்க்காமல்
தொடர்ந்து தவறிளைப்பதே
தவறு..!!
-இரா.சுதர்சன் 
எங்கே அவர் ?
யார் இவர் ?
கேளா செவிகள்
பார விழிகள்
பன்னீரு கரங்கள்
பலமான பாதங்கள்
பலவகை சக்தியாயுதங்கள்
பார்ப்போற்றும் யுக்திகள்
அபூர்வ அவதாரங்கள்
கொண்டெடுத்த யார் இவர் ?
இரு பன்னீரு நேரமும்
பால்ப்பழ பூக்கள் படைத்தது
அழகான ஆபரணம் சூட்டி
ஆர்பரிக்கும் ஆராதனை காட்டி
அனுதினமும்
தலைவனை துதிப்பாடி
தன்னை நம்பாது
இவரை நம்பும் ஞாலம்
போற்றும் யார் இவர் ?
வேறு யார்
கல்லினை கடைந்து
கலைநயம் மேம்பட
கலைஞர்கள்
சிறப்பாய் செதுக்கிய
கற்ச்சிலை தானிவர்
எங்கே அவர் ?
ஆழில் அர்த்தங்கள் தேடு
ஆயிரமுண்டு அவரிடம்
அம்பென அடியேன்
கேள்விகள் எய்திட
யார் இவர்..?
எங்கே அவர்....????
-இரா.சுதர்சன்



Thursday, 7 February 2013

நாடகமே உலகம், நாளை நடப்பதை யார் அறிவார் ??


Monday, 4 February 2013

கண்ணில் கண்டேன்
கனநொடியில் எனையே மறந்தேன்..
கைக்கெட்டா தூரமிருந்தும்
கனவுகளோடு நெருங்கினேன்..
நீ விலகிச்செல்ல
என் மனமட்டுமேனோ
விலகாமல் உன்பின்....!!
-இரா.சுதர்சன்
எனக்குள் இருக்குமுன்னை
வெளியே தேடியலைகிறேன்..!
காதல் கண்ணாம்பூச்சி....!!
-இரா.சுதர்சன்
காதல்
ஒரு காட்றாற்று வெள்ளம்..!
நீந்தியவனுக்கே நிதர்சனம்
கறை சேரும்வரை....!!
-இரா.சுதர்சன்
நானாடி
நாடாடாமல்
நடந்துக்கொள்கிறேன்..!
"குடிமகன்"....!!
-இரா.சுதர்சன்




உன்னிடம் தந்த இதயத்திற்கு
பதிலாக நீ தந்த நினைவுகளோடு
துடித்துக்கொண்டு வாழ்கிறது
எனதுயிர்....!!
-இரா.சுதர்சன்

Friday, 1 February 2013

பசி  தூக்கம் மட்டுமல்ல 
துடிக்கும் இதயத்தைக்கூட 
உணர்வதில்லை இந்த உடல்..! 
உயிர் நீயாய் இருப்பதாலோ
விவரிக்க வார்த்தைகளின்றி 
என் காதலில் நீ....!!!
-இரா.சுதர்சன் 

Thursday, 24 January 2013

உள்ளங்கள்  மாறியது !
உலகமும் மாறியது !!
-இரா.சுதர்சன்
முடிந்த பொழுதுகள் பிறப்பதில்லை !
முடியாத பொழுதுகள் ஏதுமில்லை !!
-இரா.சுதர்சன்

Sunday, 20 January 2013

வேதனையான தருணங்களின்
போது மட்டும்..!
ஏனோ களையாமல்
என் கண்களில் தூசு....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 16 January 2013

"நவீன" கட்டண கழிப்பறை மற்றும் குளியலறை !

#  ஒடஞ்ச தொட்டில தண்ணி, ஓட்ட பக்கெட்டு, கைப்புடி இல்லாத  மக்கு, ஓட்ட விழுந்த தாழ்பாள் இல்லாத கதவு ஆ எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா..............
இதுல என்ன தான் நவீனமோ தெரியல !!

ஆனா உள்ள போறதுக்கு முன்னாடியே காசு கேக்குராங்கயா !!
என்ன கொடும இது !!

Saturday, 12 January 2013

மனைவி : தண்ணி அடுச்சுட்டு வந்துருகீங்களா ?

கணவன் : இல்ல ம : :@ பொய் சொல்லாம சொல்லு..
க : லைட்டா
ம : ஒடம்பு எப்புடி இருக்கு உனக்கு ?
க : சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு இருக்கு !!
ம : ?????!!!!!!!! :-s
-இரா.சுதர்சன்

Friday, 11 January 2013

நரகமும் நீர்த்துப்போகும்..!
வாய்ப்புகள் வாய்க்கும்போது....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 9 January 2013

உன்னாலின்று
நானும் கவிதையாகிறேன்..!
நம் காதலுடன்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 8 January 2013

உலகம்..!
உண்மையை
உணராது
உண்மையான
பொய்களை மட்டுமேனோ....!!
-இரா.சுதர்சன்

Friday, 4 January 2013

சில்லென்ற காற்று
சுல்லென்ற சூரியன்..!
இவர்களின்
காதலால் பிறந்தது
என் உதட்டோர வெடிப்பு....!!
-இரா.சுதர்சன்

Tuesday, 1 January 2013

முடங்கவைக்கும்
முற்றிலுமாயுன்னை..!
வெற்றியோ தோல்வியோ
முதற்காதல்....!!
-இரா.சுதர்சன்