Saturday, 2 March 2013

எங்கே அவர் ?
யார் இவர் ?
கேளா செவிகள்
பார விழிகள்
பன்னீரு கரங்கள்
பலமான பாதங்கள்
பலவகை சக்தியாயுதங்கள்
பார்ப்போற்றும் யுக்திகள்
அபூர்வ அவதாரங்கள்
கொண்டெடுத்த யார் இவர் ?
இரு பன்னீரு நேரமும்
பால்ப்பழ பூக்கள் படைத்தது
அழகான ஆபரணம் சூட்டி
ஆர்பரிக்கும் ஆராதனை காட்டி
அனுதினமும்
தலைவனை துதிப்பாடி
தன்னை நம்பாது
இவரை நம்பும் ஞாலம்
போற்றும் யார் இவர் ?
வேறு யார்
கல்லினை கடைந்து
கலைநயம் மேம்பட
கலைஞர்கள்
சிறப்பாய் செதுக்கிய
கற்ச்சிலை தானிவர்
எங்கே அவர் ?
ஆழில் அர்த்தங்கள் தேடு
ஆயிரமுண்டு அவரிடம்
அம்பென அடியேன்
கேள்விகள் எய்திட
யார் இவர்..?
எங்கே அவர்....????
-இரா.சுதர்சன்



No comments:

Post a Comment