Monday, 15 December 2014

மார்கழி..
மலரும் மல்லிகை
மெல்லிய காற்று..
மனமெங்கும் உன் வாசம்
முடூ பனி..
மெல்லிசை
அற்றைத் திங்கள்..
ஒற்றையில் நான்
தூக்கமில்லா இரவுகள்..
பூ அவள்
விழியோரம் விடியலாய்..!
- இரா.சுதர்சன்

Wednesday, 10 September 2014

தற்கொலை செய்வது முறையா - இல்லை
தற்கொலை தான் அனைத்திற்கும் விடையா ??
வாழ்கையைத் தொடர விடைதேடாது
முடிவைத்தேடும் கோழைகளின் வீரச்செயலன்றோ..!
வீழ்ந்த விட்டில் பூச்சியும் சிறகடிக்க
சிந்தனை செய் தோல்வியை ஒழிக்க
தற்கொலை எண்ணத்தை கொலை செய்
தளராது தனம்பிக்கையை விதை செய்
- இரா.சுதர்சன்

Monday, 1 September 2014

தூக்கம் கழைந்து..
என்னவளின் நினைவுகளால்
கவிதை (?!) மட்டுமே பிறக்கின்றது....!
# தூக்கமில்லா இரவுகள்

Wednesday, 27 August 2014

கண்டேன் - அவள்
பூவிழி(கள்) பேசும்
கூரான வார்த்தைகளை..!
கோபமாம்....!!
- இரா.சுதர்சன்

Tuesday, 26 August 2014

அவஸ்தையான காதலை
அனுபவிக்க ஆசையாய்
ஆளுயர ஆயிரம்
ஆம்பலுடன் பதட்டமாய்
வார்த்தையனைத்தும்  மறந்துபோய்
நானுமொரு குழந்தையாய்
சிந்துகின்ற வியர்வையும்
உன் பெயரை சொல்லவே
பூவிழியன் பார்வையாள்
பூக்களனைத்தும் சிதறவே
நின்னுலகில் வாழவே
பொன்சிரிப்பு வேண்டுமே....!!
-இரா.சுதர்சன் 
உன் சிரிப்பினில் சறுக்கி
விழிகளில் விழுந்து
முத்தத்தால் மூழ்கி
உனதுயிரோடு கரைந்திட
உன் காதலெனும் இதயத்தை
இதயமாய் அழிப்பாயா....??
-இரா.சுதர்சன் 
மாட மாளிகை கட்டி
மண் பொருள் சேர்க்க ஆசையில்லை..!
மனிதனாக வாழமட்டும்....!!
-இரா.சுதர்சன்
Its not a big thing to do something bigger..!
but time and chance....!!
-S.R
காரணமின்றி சிரித்தேன்..
காரணத்தோடு மட்டும் நீ என்னை அனுகியபோது....!!
-இரா.சுதர்சன் 
கண்ணில் வைத்துப் பார்ப்பதாலோ என்னவோ
விழியவள் எப்போதும் உறுத்துக்கிறாள்....!!
-இரா.சுதர்சன்
புதன் கூட கிடைத்தது ஆனால் பெண்ணே
உன் கடைக்கண் பார்வை மட்டுமேனோ....!!
-இரா.சுதர்சன்

Friday, 22 August 2014

மரணத்தைக் (?!) கூட தழுவலாம் போல..!
உன்னால் நான் தொலைக்கும் தூக்கமில்லா இரவுகளுக்கு....!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 20 August 2014

பெண்ணின்றி உலகில்லை 
பெண்ணொன்றே உலகமுமில்லை..
காமத்தை கரைத்து சற்றே காதலிலும் உறை....!!
-இரா.சுதர்சன்

Monday, 18 August 2014

பூவிழியாள் என்னை
புகைப்பட வழியால்
பூவொடு நாறை போல்
கண்களால் கைது செய்தாள்..!!
-இரா.சுதர்சன்

Thursday, 7 August 2014

நின் நம்பிக்கையை நம்பும் பொழுது நீ மேலும் பலமானவனாக மாறுகிறாய்....!
-இரா.சுதர்சன்

Monday, 28 July 2014

என் உள்ளுணர்வுகளை கொட்டித்தீர்க நினைக்கும் பொழுது என் எழுதுகோலும் மையாக கண்ணீர் வடிக்கின்றது....!!
-இரா.சுதர்சன்

Friday, 27 June 2014

விலையற்றதும்..
விலைமதிப்பற்றதும்..
அறிவுரை....!
-இரா.சுதர்சன்

Wednesday, 25 June 2014

என் கவலைகளை கொட்டித் தீர்க வார்த்தைகள் கிடைக்காத பொழுதுகளில் எனக்குவியதது என் கண்ணீர் மட்டுமே..!
-இரா.சுதர்சன

Saturday, 7 June 2014

அன்பு - ஆர்பாட்டமில்லாமல் உலகை ஆளுமோர் உன்னத உறவு....!!
- இரா.சுதர்சன்
பூவில் மது..! உன்னில் கவிதைகள் ....!! -இரா.சுதர்சன்
உயிருள்ள பிணங்கள் வாழும் கோட்பாடற்ற கோலோ இந்த உலகம்....!! -இரா.சுதர்சன்
தவறுதலாக செய்யப்படும்
பிழைக்கு கிடைக்கும் தண்டனையின்
வலி, தண்டனையின்
வலியை காட்டிலும்
பண்மடங்கு அதிகமே....!!
-இரா.சுதர்சன் 
உடல், உடையோடு சற்றே உள்ளத்தையும் சேர்த்து எடை போடுங்கள்..!!
- இரா.சுதர்சன் 

Wednesday, 14 May 2014

உன் கைகள் எனும் விலங்கினாள் என் தேகத்தை பூட்டி..
உன் தேகமெனும் சிறையினில் அடைப்பாயானால்..
நான் ஆயுள் கைதியாகவும் தயார் தான்....!!
-இரா.சுதர்சன் 

Monday, 12 May 2014

உன் தலையேறா பூக்கள் மட்டுமல்ல..
உனை காணாத என் கண்களும் தான் வாடி தவிக்கின்றது....!
-இரா.சுதர்சன்

Thursday, 24 April 2014

விதை முளைத்த செடி மட்டுமல்ல..
என் கண்களும் தான்..
உன் ஒற்றை பார்வைக்காக
பூத்துக் கிடக்கின்றது....!!
-இரா.சுதர்சன்

Saturday, 19 April 2014

வானத்திற்க்கு மட்டுமல்ல..!
உன் மேல் நான் கொண்டிருக்கும் காதலுக்கும் தான்..
எல்லையேயில்லை...!!

-இரா.சுதர்சன்

Thursday, 13 February 2014

தனிமை !!
பல மனிதர்களின் மனம்
பண்படவும், பழுதடையவும்
பெரும் பங்கு வகிக்கிறது....!!
-இரா.சுதர்சன்  

Monday, 6 January 2014


கருவேலஞ் சோலையிலே நின்றாடும்
நிழலினிலே நின் மடியில் படுத்துறங்க வறண்ட பூமியும் பஞ்சாய் போனதடி..!
பறந்ததரிந்தும் இளவங் கிளிபோல காத்திருக்க கால் தடுத்த புல்லின் பனியும் பாறயாய் மாறியதேனோ....!!
-இரா.சுதர்சன