Monday, 31 October 2011


என்ன ஓர் அதிசியம்....
அமாவாசை இரவில் நீளமான நிலா !!
அடடே....
என்னவளின் கார்கூந்தலில் மல்லிகைப்பூ....!!
- இரா.சுதர்சன் 

அதிசயம் ....
பல முறை   இறந்தும் ., உயிருடன்  இருக்கிறேன் ..

காதல் எனும் குழியில் விழுந்ததால்....
- இரா.சுதர்சன் 


ஆம், பத்து மாதம் சுமந்தது 
இருபது ஆண்டு வளர்த்தது - அனைத்தையும் மறந்து 
பத்து நாள் பழகிய பாவத்திற்காக 
உயிரையும் பிடுங்கும் காதல் விசித்திரமானது தான் !!!!
-
இரா.சுதர்சன்

பூலோகத்தில் தேவதை சந்தேகத்தில் நான்
என்னுடன் என்னவள் !!
-
இரா.சுதர்சன்
உண்மையாய் நேசிதுப்பார் தெரியும்
உன் இதயம் கூட சத்தமின்றி அழுமென்று....!
-
இரா.சுதர்சன்

உண்மை -
காதலில் தோல்வி 
வலியின் வேதனையில்,
கண்களால் காதல் செய்தேன் - கண்டறிந்தேன் 
பிறகுதான் காதலுக்கு 
கண்கள் இல்லை என்று......!! 
-
இரா.சுதர்சன்

இதயத்தில் வலி......
உன் இனிய வரவிற்காக காத்திருந்து
அடைக்க மறந்தேன் வாயிலை - கனமான 
துடிப்பில் என் இதயம்..
-
இரா.சுதர்சன்

ஒருவருமின்றி 
பலரை உணர்ந்தேன்,
பலர் இருந்தும் தனிமையை உணர்கிறேன்.,
உண்மைதான் தோற்றது - மெய் 
காதல் ஜெய்க்குமோ எப்போதும்.....
-
இரா.சுதர்சன்

இனிய - 
தீ யில் சுட்ட மண்ணில் 
க்குவமாய் பஞ்சிட்டு 
ஒளி ஏற்றி 
திரு முருகனிடம் வரும் 
நாள் முழுதும் ஆசி பெற்று வாழ்வில் சிறக்க 
வாழ்த்துக்கள்........

-
இரா.சுதர்சன்

கனவு தேவதை கண்முன் வந்தால்
காதல் ஆசையை என்னுள் தந்தாள்
மின்மினியைப்போல் அவளை கண்டு
பட பட துடிக்குது இதயம் இன்று
முதற் முதலாய் நான் கிறுக்கிய கிறுக்கல்
அவள் கண்களை பார்த்து கிரங்கியதாலே - எனை 
முத்தம் தந்து உயிர்ப்பிப்பாலா
நித்தம் நித்தம் நோகடிப்பாலா.....!!

-
இரா.சுதர்சன்
காதலுக்கு கண்கள் இல்லை
கூற்று இப்படி இருக்க 
விழிகளால் பேசுவது எப்படி
ஊமை - பாசையா, காதலா ??
-
இரா .சுதர்சன்
காதல்..
சில கவிஞர்களை மட்டும் உருவாக்கவில்லை 
பல கல்லறைகளையும் சேர்த்துதான்....!!
-இரா.சுதர்சன் 
காதல் தோற்க்காது - ஆம்
உனையோர் கவிஞனாக்கி ஜெயக்கவைத்துவிடும்....!!
-
இரா.சுதர்சன்