என் இனிய நீங்கா நினைவுகள்...........
அன்று வெள்ளிக்கிழமை, நான்காம் வகுப்பு வரலாற்றுப் பாடம் அந்த வாரகால அட்டவணையின் கடைசி வகுப்பு.... வாரக்கடைசி என்றாலே சந்தோசம் தான் அதுவும் கடைசி வகுப்பென்றால் கேட்கவா வேண்டும், விடுமுறை நாளில் புத்தகத்தை சுமக்க தேவையில்லை, எனவே சந்தோசமாக நண்பர்களுடன் விளையாடி பொழுதை எப்படி கழிக்கலாம் என்றெல்லாம் மனசுக்குள் கற்பனைகளோடு நானும் என் மிக நெருங்கிய தோழனுள் ஒருவனான வருணும் ஒருவரை ஒருவர் பார்த்து பொன் மொருவல் பூத்துக்கொண்டிருந்த வேலையில், வரலாறு ஆசிரியை... நான் பாடம் நடத்திட்டு இருக்கும் போது இங்க கெவனிக்காமா அங்க என்ன சிருச்சிகிட்டு இருக்கீங்க இங்க பாடத்த கவனீங்கடா என்று கூறி திட்டக்கொண்டிருக்க , எங்களை பார்த்து எங்களின் நெருங்கிய தோழியான தீபா பேசாம உக்காருங்கடா என்றால், மீண்டும் பாடத்தை தொடர்ந்தார் ஆசிரியை சித்ரா , காலையில் இருந்து வேகமாக நகர்ந்த கடிகார முட்கள் அப்போது மட்டும் ஏனோ மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தது, சற்று நேரம் கழித்து நானும்,வருனும் மற்றொரு நண்பன் அசோக்குடன் சேர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தோம் அதுவும் அந்த வகுப்பே எங்கள் பக்கம் பார்க்கும் படி எங்கள் ஆசிரியையின் சத்தத்திற்க்கும் சற்று சத்தமாகவே பேசிக்கொண்டிருந்தோம், சற்றே எதிர்பாரத அளவிற்கு கோபம் கொண்டார் ஆசிரியை சித்ரா, என்னெனில் அவர் அதிகமாக கோபம் கொல்லாத ஆசிரியை, எங்கள் மூவரையும் அழைத்து எங்களை அடிக்க மேஜை டிராவில் வைத்திருந்த அடிக்கோலை தேடினார்., நான் என் தோழியை பார்க்க அவளோ நல்லா மாட்டுனியஅடி வாங்கு அடி வாங்கு என்று கூறி சிரித்தால், நண்பர்கள் அசோகும் வருணும் பயந்துக் கொண்டிருக்க நான் மட்டும் சற்று தைரியமாக இருந்தேன் , அன்று மதியம் எங்கள் மதிய உணவு இடைவேளையின் போது அந்த அடிக்கோலை பள்ளியின் அருகே இருந்த சாக்கடைக்குள் நான் தூக்கி எறிந்த தைரியம் தான் அது, அடிக்கோல் கிடைக்காமல் வகுப்பு தலைவனான (லீடர் ) என் மற்றொரு நண்பன் மோகனை மோகன் இங்க இருந்த ஸ்கேல் எங்க போச்சு என்று வினவ மோகனோ தெரிலிங்க மிஸ் அங்க தான் இருந்துது என்றான், சித்ரா சற்றே தலையை அருகில் இருந்த மற்றொரு வகுப்பை பார்த்தார் அங்கு இசைவாணி எனும் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்தார், வாணி மிஸ் கொஞ்சம் ஸ்கேல் தாங்க என்றார் சித்ரா , உடனே கடைசி வரிசையில் மணிமேகலை, டீனுப்ரிய, நந்தினி ஆகிய மூவரும் ஒன்றாக ஸ்கேலை வாங்க எழுந்திரிக்க வாணி மிஸ்சோ நந்தினியை அலைத்து இந்த நந்தினி இந்த ஸ்கேலை சித்ரா மிஸ் கிட்ட குடு என்றார் ஸ்கேலை தந்தனிப்பினர் அன்று நாங்கள் மூவரும் வாங்கிய அடி வருண், அசோக்கிற்கு இப்போது எப்படியோ ஆனால் இன்றளவும் என்னால் மறக்க முடியாத ஒன்று காரணம் என் நெருங்கிய தோழி தீபாவும் வருத்தப்பட்டது தான்....
சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்றேன், டேய் ஹோம் வொர்க் முடுசுடியா டா என்று என்னை பார்த்து கேட்டவளிடம் இல்ல தீபா கொஞ்ச எழுதி தா டி என்று உரிமையுடன் கேட்க மறு பேச்சு பேசாமல் எழுதி தந்தாள் தீபா, இதை அறிந்த வாணி ஆசிரியை தீபாவை நன்றாக அடி சாத்துவார் என நினைத்தேன் ஆனால் தீபா பள்ளியிலே சிறந்த மாணவி எனவே இதா கடைசி இனிமே இப்புடி எல்லாம் பண்ணக்கூடாது சரியா என்று தீபாவுக்கு புத்திமதி கூறி அனுப்பினர் ஆனால் என்னை அழைத்து பிரின்சிபல் ரூமுக்கு போ என்றார் வாணி மிஸ் நானும் சென்றேன் அங்கே பள்ளியின் முதன்மை ஆசிரியர் ஆறுச்சாமி கையில் குச்சியுடன் என்ன தம்பி ஹோம் வொர்க் பண்ண மட்டேன்குற கிளாஸ்ல ரொம்ப குறும்பு வேற பன்றியாம என கூறியவரே என்னை ஒரு அடி அடிக்க சித்ரா, இசைவாணி இரு ஆசிரியர்களும் வந்து சார் கிட்ட இனிமே இப்புடி பண்ண மாட்டேனு சொல்லு என்றனர் நானும் அடியில் இருந்து தப்பிக்க அப்படியே கூற தீபா கதவோரம் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்தால், வெளியே வந்ததும் என்னிடம் வலிக்குதா என்று அவள் கேட்டது இன்றளவும் என் காதுகளில் இனிமையாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது..!!
ஐயிந்தம் வகுப்பு முடித்த நிலையில் அந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளி, கல்லூரி என மாறியதால் அவர்களுடனான தொடர்பு அறவே இல்லையெனினும் கூட (வருண் தவிர ) அவளைப்போல ஒரு தோழியும், இவர்களை போல நல்ல நண்பர்கள், சித்ரா,இசைவாணி போன்ற ஆசிரியர்கள் இன்றளவும் கிடைக்கவில்லையே என்று நினைக்கும் பொழுது சற்றே மனம் நெருடத்தான் செய்கிறது :'( :(...............
பள்ளி வாழ்க்கை...... அதுவும் ஆரம்பப்பள்ளி வாழ்க்கை.... நினைக்க நினைக்க அடிநாக்கில் அடைகாத்த இனிப்பை போன்றே இனிமையாகத்தான் இருக்கிறது.............!!!!!!!!
-இரா.சுதர்சன்