Sunday, 25 March 2012

எழுத்தாளன் காகிதத்திற்கு சுமை எழுதுகோலிற்கு சுமை தாங்கி....!!
- இரா.சுதர்சன் 

Tuesday, 20 March 2012

பட்டாம்பூச்சிக்கு
படபடக்க கற்றுத்தந்தவளே..!
என்னை வைத்து மூடிக்கொள்
உன் இமைகளை இருக்கமாய்
இல்லையெனில் நானும்
பறக்க ஆரம்பித்துவிடுவேன் போல....!!
-இரா.சுதர்சன்

முடிவில்லாமல்
நீண்டுகொண்டே போகிறது
என் காதல்..!
இரு தண்டவாளங்களை போல
சேராமலேயே....!!
-இரா.சுதர்சன் 
காரணமில்லா  காதல்கொண்டு
கண்நீர்த்துளிகளும் கவிதையாம்
காகிதத்திலின்று....!!
-இரா.சுதர்சன்
இன்பமில்லை துன்பமுமில்லை
வெற்றியில்லை தோல்வியுமில்லை
பாராட்டுமில்லை  பழியுமில்லை
நண்பனுமில்லை பகைவனுமில்லை
நன்மையுமில்லை தீமையுமில்லை
உண்மையுமில்லை  பொய்யுமில்லை
சந்தோசமில்லை துக்கமுமில்லை
தனிமையில் இனிமை....!!
-இரா.சுதர்சன்




கழுதைக்கு காதல் வந்தால்
காகிதப்பரிசு..!
மனிதனுக்கு வந்தால்
மரணம் தான் பரிசு....!
-இரா.சுதர்சன் 
நல்லவனாய் இருந்தால் நசுக்குகிறது
நடுநிலையாய் இருந்தால் சிரிக்கிறது
தீயவனாய் இருந்தால் தூற்றுகிறது..!
உலகத்தின் பார்வை....!!
-இரா.சுதர்சன் 
எதிரியை தாழ்த்தி எண்ணாதே
உன்னையும் நீயே தாழ்த்தாதே..!
தாழ்ந்து போவாய் எதிரியிடம்....!!
-இரா.சுதர்சன்

உன்னிடம் பேசும்போது மட்டும்
நான் சொல்லும் சொல்லை கேட்பதில்லை
என் மனசு
வாய்க்கு வந்தப்படி உளறுகிறது
என் காதலை தவிர்த்து அனைத்தையும்....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 4 March 2012

என் வாழ்க்கையில்
அவள் கிறுக்கியதால்
நான் இந்த காகிதத்தில் இப்போது..!!
-இரா.சுதர்சன் 
அன்றோ
நினைவரியா வயதில்
வாய்விட்டு அழுதேன்
வேண்டியதை நிறைவேற்ற..!
இன்றோ
வாய் மூடி அழுகிறேன்
வேண்டியதை
நினைவிளிருந்தகற்ற....!!
-இரா.சுதர்சன்