Wednesday, 27 August 2014

கண்டேன் - அவள்
பூவிழி(கள்) பேசும்
கூரான வார்த்தைகளை..!
கோபமாம்....!!
- இரா.சுதர்சன்

Tuesday, 26 August 2014

அவஸ்தையான காதலை
அனுபவிக்க ஆசையாய்
ஆளுயர ஆயிரம்
ஆம்பலுடன் பதட்டமாய்
வார்த்தையனைத்தும்  மறந்துபோய்
நானுமொரு குழந்தையாய்
சிந்துகின்ற வியர்வையும்
உன் பெயரை சொல்லவே
பூவிழியன் பார்வையாள்
பூக்களனைத்தும் சிதறவே
நின்னுலகில் வாழவே
பொன்சிரிப்பு வேண்டுமே....!!
-இரா.சுதர்சன் 
உன் சிரிப்பினில் சறுக்கி
விழிகளில் விழுந்து
முத்தத்தால் மூழ்கி
உனதுயிரோடு கரைந்திட
உன் காதலெனும் இதயத்தை
இதயமாய் அழிப்பாயா....??
-இரா.சுதர்சன் 
மாட மாளிகை கட்டி
மண் பொருள் சேர்க்க ஆசையில்லை..!
மனிதனாக வாழமட்டும்....!!
-இரா.சுதர்சன்
Its not a big thing to do something bigger..!
but time and chance....!!
-S.R
காரணமின்றி சிரித்தேன்..
காரணத்தோடு மட்டும் நீ என்னை அனுகியபோது....!!
-இரா.சுதர்சன் 
கண்ணில் வைத்துப் பார்ப்பதாலோ என்னவோ
விழியவள் எப்போதும் உறுத்துக்கிறாள்....!!
-இரா.சுதர்சன்
புதன் கூட கிடைத்தது ஆனால் பெண்ணே
உன் கடைக்கண் பார்வை மட்டுமேனோ....!!
-இரா.சுதர்சன்

Friday, 22 August 2014

மரணத்தைக் (?!) கூட தழுவலாம் போல..!
உன்னால் நான் தொலைக்கும் தூக்கமில்லா இரவுகளுக்கு....!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 20 August 2014

பெண்ணின்றி உலகில்லை 
பெண்ணொன்றே உலகமுமில்லை..
காமத்தை கரைத்து சற்றே காதலிலும் உறை....!!
-இரா.சுதர்சன்

Monday, 18 August 2014

பூவிழியாள் என்னை
புகைப்பட வழியால்
பூவொடு நாறை போல்
கண்களால் கைது செய்தாள்..!!
-இரா.சுதர்சன்

Thursday, 7 August 2014

நின் நம்பிக்கையை நம்பும் பொழுது நீ மேலும் பலமானவனாக மாறுகிறாய்....!
-இரா.சுதர்சன்