இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Monday, 28 May 2012
மாறிவிட்டான் மனிதனாக..!
ஆனால் மனம் மட்டும்
இன்றளவும் குரங்கைப்போல
அங்குமிங்குமாய்....!!
-இரா.சுதர்சன்
நினைவுகள் நீங்குவதில்லை
முடிவுவரை
முதற்முறையில்
ஒருமுறையாயினும்
ஓட்டத்தின் இறுதிவரை..!
காதல் தோல்வி....!!
-இரா.சுதர்சன்
என் கவிதைகள்
பூர்த்தியடைவதில்லை..!
இறுதியில்
உன் பெயராம்
என் புனைப்பெயரை இடாமல்..!!
-இரா.சுதர்சன்
Thursday, 24 May 2012
கேணி தொட்ட தண்ணீரை விட
உன் மேனி தொட்ட தண்ணீருக்கு
சுவை அதிகமடி....!!
- இரா.சுதர்சன்
Wednesday, 23 May 2012
எளிமையானவர்..!
பெரிய வீட்டை
வைத்துக்கொண்டு
வாசம்செய்கிறார்
அதிகமாக
சிறிய வீட்டிற்க்கு....!!
-இரா.சுதர்சன்
அன்றோ விஞ்ஞானி
புதிய படைப்புகள்
புதிய முயற்சிகளுக்கு..!
இன்றோ பைத்தியக்காரன்....!!
-இரா.சுதர்சன்
Monday, 21 May 2012
பார்வை
பறிமாற்றம்..
காதல்
சந்தேகம்..
கவலை
கண்ணீர்..
கவிதை
கல்லறை..!
காதலின் கதை....!!
-இரா.சுதர்சன்
Sunday, 20 May 2012
கணக்கில்லா காதல் கொண்டேன்
பகிராமல் பற்றிக்கொண்டாள்
சுவாசமின்றி சுருண்டுக்கிடந்தேன்
சுகமான சுவாசமாய்
உயிரோட்டம் பெற்றுத்தந்தாள்
இருட்டறையாம்
கருவறை சிம்மாசனத்தில்
கடவுளாய் குடியேற்றினாள்
எனக்காக துடித்த
என் முதல் இதயமாய்
இனிய அம்மா....!!
-இரா.சுதர்சன்
Friday, 18 May 2012
கண்கள் பார்த்து
புன்னகைப்பூ பூத்து
இமைகளை
இறுக்கமாய் மூடி
இதயம் இடறி
மனது மயங்கி
கைகள் கசக்கி
கால்களால் கோலம்..!
வெட்கமாம்....!!
-இரா.சுதர்சன்
பார்த்து..
பாதியோடு பறிப்போகும்
வாழ்க்கைப்பயணம்..!
இனி வேண்டாம்
படியில் பயணம்....!!
-இரா.சுதர்சன்
Wednesday, 16 May 2012
நான் கவிதை எழுத
காகிதம் கூட தூய்மையாகவே உள்ளது..!
உன் தூய எண்ணத்திற்கு
கவிதை எனும் உயிர் தந்து
அலங்கரிக்க எண்ணி....!!
-இரா.சுதர்சன்
காதலுக்காக கவிதை
எழுதி எழுதி என்
கைகள் மட்டுமல்ல
மனதும் காய்ந்துவிட்டது..!
உன்னை மறப்பது போல
இனி இந்தக்கவிதையையும்....!!
-இரா.சுதர்சன்
Sunday, 13 May 2012
நம்மில் பாதியாம் நட்பு அதற்க்கு
நாடறிய நன்றிகள் எதற்க்கு..?
புன்னகைப்பூவொன்று போதுமாம்
பூலோகம் முழுவதுமாய்
பூத்துக்குலிங்கிடும் நட்பு....!!
-இரா.சுதர்சன்
கருவறை
கற்சிலைகள்
கடவுள் இல்லை..!
உன்னை
கருவறையில்
சுமந்த
அன்னை மட்டுமே....!!
-இரா.சுதர்சன்
Friday, 11 May 2012
தலையேறா தாமரை..!
முதிர்க்கன்னி....!!
-இரா.சுதர்சன்
Thursday, 10 May 2012
உன் விழி
அம்பு கொண்டு எய்ததினால்
என் இதயம்
காயமடைந்துள்ளது..!
காதலெனும் பெயரில்....!!
-இரா.சுதர்சன்
காதலுக்காக
எதையும் செய்ய
துணிந்த நான்..!
காதலுக்காக
காதலை
துறந்த நிலையில்....!!
-இரா.சுதர்சன்
Sunday, 6 May 2012
சில்லறை சத்த சிரிப்புடன்
பொக்கைவாய் பாட்டி..!
கையில் பிட்சைப்பாத்திரம்....!!
-இரா.சுதர்சன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)