Saturday, 29 September 2012

உன் நண்பர்கள் மீது மட்டுமல்ல
நீ சுவாசிக்கும் காற்றின் மீதும்
அவ்வப்போது பொறாமை தானடி எனக்கு....!!
-இரா.சுதர்சன் 
உன்னால் உடைக்கப்பட்ட
என் இதயக்கண்ணாடியிலும் கூட
நீயே இருக்கிறாய்..!
ஆனால் என்ன
அன்றோ ஒரு பிம்பமாய்
இன்றோ பல....!!
-இரா.சுதர்சன் 
பொறாமை..!
உனக்காக நானிருக்க
உன் இதயம்
ஏன் தான் துடிக்கிறதோ....!!
-இரா.சுதர்சன் 
கவிதை எழுத
கண்களை மூடினேன்
புலப்பட்டது உன்
கண்களின் பாசை மட்டுமே
கவிதையாய்....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 26 September 2012

மனம்
முள்ளென தெரிந்தும்
பரிக்கச்சொல்லும்
காதல் ரோஜாவை....!!
-இரா.சுதர்சன் 
அறியா பாதைகள்
அறிந்துப்போகும்
ஆணவம்
அழிந்திடும் போது....!!
-இரா.சுதர்சன் 
நானிறந்தேன்
என்றறியாமல் நித்தம்
என்மேல் நீர் தெளித்து
எழுப்ப முயற்சிக்கிறாள்
இந்தப்பூக்காரி....!!
-இரா.சுதர்சன் 
ஓய்வெடுத்து ஓயும்
நானுனை ஓயாமல்
நினைத்தாலும் ஓய்வதில்லை....!!
-இரா.சுதர்சன்