Thursday, 28 June 2012

திருடனை
கூட்டினிலடைத்தேன்
ஏசுகிறது உறவுகள்.!
இதயத்திருடனை
என் இதயக்கூட்டிற்குள்....!!
-இரா.சுதர்சன் 
உனை மறக்க நினைக்கிறேன்..!
ஆனால் உனை
நினைத்து மறப்பதையும்
மறந்துவிடுகிறேன்....!!
-இரா.சுதர்சன்  
நிழலலித்தான்
நிழலைத்தேடுகிறான்..!
மரவெட்டி....!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 27 June 2012

ஆபத்தென அறிந்தும்  
பாம்பிற்கு பால்
வார்ப்பது போலத்தான்..!
இந்தக்காதலும்....!!
-இரா.சுதர்சன் 

கண்ணீரில்
கரைகிறது காகிதம்..!
கவிதையாம் காதலின் 
களியாட்டத்தில்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 26 June 2012

ஓயாமல் உழைத்தப்பின்
உழைக்க ஆரம்பிக்கும் 
பெருமூச்சு..!
நிம்மதி....!!
-இரா.சுதர்சன்
எங்கோ இருக்கும்
யாரையோ நினைக்கும் நீ 
உனதருகிலிருக்கும்
எனை ஏன் மறந்தாயடி..!
எனக்கான நினைவுகள்
உன்னில் விக்கலாய்....!!
-இரா.சுதர்சன் 

Monday, 25 June 2012

மாற்றான் மனைவிக்கோர்
மாடமாளிகை
மனிதனை முடமாக்கி 
மரணத்தையுமல்கி..! 
ஞாலம் போற்றும் 
காதல் சின்னமாம்....!!
-இரா.சுதர்சன்

Sunday, 24 June 2012

வாழ்நாள் குறைவு
மேலும் குறைக்கிறான்..!
கல்லறை வ(லி)ழியாம்
கசந்த காதலில்....!!
-இரா.சுதர்சன்
என் இதயமும்
எனை ஏமாற்றிவிட்டது..!
எனக்காக துடிக்காமல்
உனது பிரிவிற்க்காக....!!
-இரா.சுதர்சன்

Saturday, 23 June 2012

வெட்ட வெட்ட வளரும்
வாழை கன்றைப்போல
என் காதலும்..!
நீ வெறுக்க வெறுக்க
வேரூன்றிப்போகிறது....!!
-இரா.சுதர்சன் 

Thursday, 21 June 2012

வெள்ளை மனசுக்காரர்களை
கருப்பாய் வடித்தால் விடுவோமா,
வெள்ளையாக்குகிறோம்
வேடிக்கைப்பாருங்கள்..!
பரவசத்தில் பறவைகள்....!!
-இரா.சுதர்சன்  

Friday, 15 June 2012

இலக்கணம் இலக்கியம்
எதுகை மோனை
சொல் பொருள்
ஏதுமறியா எனக்கு - உன்
கடைக்கண் பார்வைப்பட்டதும்
இதயம் படபடக்க
ஏதோ என் கைகள் கிறுக்க
கவிதையாய் அள்ளித்தெளிக்கிறது
என் மனது....!!
-இரா.சுதர்சன்  

Wednesday, 13 June 2012

அவளால் திருடப்பட்டு
சிறையில் வைத்த
என் இதயத்தை,
பொருளேதும் அறியாமல்
விடுதலை செய்துவிட்டாள்..!
இதயமில்லாது
இனிமையாய் வாழ்ந்தேன்
இன்றோ இதயமிருந்தும்
இயற்க்கை எய்துகிறேன்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 12 June 2012

மேகமே
நீ நீலிக்கண்ணீர் வடிக்க
மக்கள் சிரித்தனர்
பூமித்தாய் சிரிக்க
கோவம் கொள்கிறார்கள்..!
மானுட மாற்றங்கள்...!!
-இரா.சுதர்சன் 
பைத்தியக்காரன்..!
உன்மேல்
நான் கொண்ட காதலில்
உன்னிடம் நான்
என் தனிமையில் பேசும்போது
மனிதர்கள் எனக்கு
பார்த்தளித்தப்பட்டம்....!!
-இரா.சுதர்சன்

Thursday, 7 June 2012

உயிர் மட்டுமல்ல
உலகமே இருளாய் இருக்கும்..!
வெற்றிப்பெற்று தோற்க்கும் பொழுது
இந்தக்காதலில்....!
-இரா.சுதர்சன்

Wednesday, 6 June 2012

மழைத்துளி..!
துளித்துளியாய்
என்னை
நனைத்தாலும் சரிதான்
அது உன்
முத்தங்களாக இருப்பின்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 5 June 2012

கனவுகள்..!
இலட்சியங்கள்
மெய்ப்பட 
காரணகர்த்தா....!!
-இரா.சுதர்சன்