Saturday, 25 August 2012

பள்ளிகளை
பள்ளிகளாக
புதுப்பிப்போம்..!
வகுப்புகளை
வகுப்பின்றி
புனரமைப்போம்..!
பூட்டியதோர்
பூட்டைப்பிளந்து
புத்துயிர்பெருவோம்....!!
-இரா.சுதர்சன்
நீர் இருந்தும்
வற்றிய கிணறுதான்..!
உனை காணாத என் கண்கள்....!!
-இரா.சுதர்சன்

கவிதையெழுத
வார்த்தைகள் எதற்கு..!
உன் பட்டுப்பார்வையில்
பற்றிக்கொண்டேன்....!!
-இரா.சுதர்சன் 
வயிற்ரை நிரப்ப
வயிற்ரை கழுவுகிறாள்..!
விலையில்லாமல்
விலைக்காக
விலை மாது....!!
-இரா.சுதர்சன் 
காதல்
பல
கற்பனைகளுக்கு காரணமாகி
கல்லறைக்கு வழிகாட்டுமோர்
விதியின் பாதை....!!
-இரா.சுதர்சன்

சொல்லி சொல்லி பார்க்கிறேன்
சொல்லதான் முடியவில்லை..!
உன் பெயரை தவிர
வேறோர் சிறந்த கவிதையை...!!
-இரா.சுதர்சன்