Tuesday, 28 February 2012

புது வீடு திருஷ்டி பொம்மைக்கு
பேன்ட்டு சட்டையாம்..!
வேடிக்கை பார்க்கும் குழந்தை பிறந்த மேனியாம்....!!
-இரா.சுதர்சன்  

Tuesday, 21 February 2012

உயர்வு தாழ்வினை துடைத்தெடுத்து..
சாதியை சில்லாக சிதைத்தெடுத்து..
மதத்தை மூட்டைகட்டி..
முடிபோட்டனைத்தையும்  தீயிலிட்டு 
நாடை நாடாக்கி நாடோங்க
நாட வேண்டும் நல்ல நடப்பை....!!
-இரா.சுதர்சன் 

Monday, 20 February 2012

பட பட பேச்சும்
பால் போல சிரிப்பும்..
மீன் குவியாடி கண்ணும்
குளிக்கொண்ட கன்னமும்..
வெள்ளை மனசும்
வெகுளி குணமும்..
கார மிளகாய் மூக்கும்
கொத்தவரை காதும்..
சங்கு கழுத்தும்
சிவப்புக்கோவை உதடும்..
மேக கூந்தலும்
வானவில் புருவமும்..!
நீ கைக்கொடுத்த கையுக்கடி
கவிதை எழுத தோணுதடி..
காதலில் விழவில்லையடி
கால்வாசி உயிர் போனதடி..
இருந்தாலும் இக்கணம்
நோகுதே என்மனம்....!!
-இரா.சுதர்சன்








Wednesday, 15 February 2012

கையில் நெய், வெண்ணைக்கு அலைகின்றான்..!
மின்சாரம் வேண்டுமாம் ஆனால் கூடங்குளம் மட்டும் திறக்காது....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 14 February 2012

ஆண் பெண் மீதோ
அல்லது
பெண் ஆண் மீதோ
வைப்பது மட்டும் காதலல்ல
காதல் என்பது
ஒருவர் மீது ஒருவர்
காட்டும் ஓர்
ஆரோகியமான உணர்வும் கூட....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 12 February 2012

வரும் கால தூண்கள் சுமக்கின்றன..!
புத்தகப்பையை அல்ல
தூண்கள் செய்ய செங்கற்களை....!!
-இரா.சுதர்சன்

குழந்தை தொழிலாளி..!

வீடுகள் பெருக்கி
குப்பைகள் சேர்த்து
குப்பைக்கூடதிலிட்டான்
குழந்தை தொழிலாளி.....

குப்பையில்
கோழியை போல் கிளறி
நகரமெங்கும் அலைந்து
காகிதம் சேகரித்தான்
குழந்தை தொழிலாளி..... 

பாத வண்டியில்
காகித பொதியேற்றி பறந்து
பணிமனையில் பறிமாறினான்
குழந்தை தொழிலாளி.....

இயந்திரத்தை இயக்கி
காகிதத்தை கூழாக்கி
புதியதோர் காகிதம் செய்தான்
குழந்தை தொழிலாளி..... 

செய்த காகிதத்தில்
நூலினை கோர்த்து
படம் போட்டு எழுத்தச்சிட்டான்
குழந்தை தொழிலாளி..... 

புதியதோர் புத்தகம் செய்து
பள்ளிக்கு எடுத்துச்சென்றான்
பாட புத்தகமாய்
குழந்தை தொழிலாளி..... 

இத்தனைக்கும்
பின்னின்று பாடுபட்டு
புயத்தில் சுமக்கிறான்
குழந்தை தொழிலாளி
""புத்தக பையல்ல""
புழுதி நிறைந்த சாக்குப்பையை
மீண்டும் வீட்டை பெருக்கி
போட்ட குப்பையை சேகரிக்க
குழந்தை தொழிலாளி....!!

-இரா.சுதர்சன்

Saturday, 11 February 2012

ஒ இதற்க்குப்பெயர் தான் அரசியலா..!
எனக்கு புரியாத புதிராய் இருந்த அரசியலை
புரியவைத்தான் அலுவலக அரசியலாக 
நான் நம்பிய துரோகி..
ஆயினும் நன்றி சக பணியாலா
எனக்கு  அரசியலை புரியவைத்ததர்க்காக….!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 8 February 2012

பெண்களின் கண்ணக்குழி
ஆண்களை
காதலில் கூட விழவைக்கும்
புதர்க்குழி....!!
-இரா.சுதர்சன் 
உன் குறும்பு குணம் கண்டு காதலித்தேன்..!
என் காதலையும்
குரும்பாகதான்  ஏற்றுக்கொள்வாய்
என்றறியாது....!!
-இரா.சுதர்சன் 
விரக்தியுடன் வாழ வழி இன்றி விவசாயி
தூக்கிற்கு கயிர் கூட வாங்க துப்பில்லையம்
மதிய மாநில அரசோ மார்தட்டி கொள்கிறது
விவசாயிகளின் தரம் உயர்ந்துள்ளதாம்
ஆம் உயர்ந்து தான் உள்ளது
தொங்கும் அளவிற்கு..!
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாட்டின் உயிர் நாடி 
உயிர் அற்று போகும் போல....!!
-இரா.சுதர்சன்  
கைகளால் கோலம் போட தெரியாதவள்
கால்களால் போடுகிறாள்..!
கடற்கரை மணலில்
அவள் பாத சுவடுகள்....!!
-இரா.சுதர்சன்

கடவுளுக்கு பூஜை
காதலுக்கு கவிதை..!
லஞ்சங்கள்....!!
-இரா.சுதர்சன்

கல்லறை வாசம்..!
காதல் வலையில் சிக்கும்
சில மீன்களின் வாசஸ்தலம்....!!
-இரா.சுதர்சன்  
அறிந்தேன்..!
நான் நாமாகும் தருணத்தில்
நாணத்தை....!!
- இரா.சுதர்சன் 

Monday, 6 February 2012

கூயில் பா சீ 
பூ ஏ இட்டு தா நே 
ஐபில் வீபோல மீ மீ.. 
வா நீ நின் தே நான்.....!!
 -இரா.சுதர்சன் 


பூமியில் அழகு திருமகள்
பூ அம்பு இட்டு கேட்பது அன்பு
வியப்பில் பறவை போல மேல மேல நான்...
அழைத்தேன் உன் நாயகன் நான் தான் என்று.....!! 

 -இரா.சுதர்சன்   

(கூ > பூமி, பா >அழகு, சீ >திருமகள், ஏ > அம்பு, தா >கேட்பது, நே > அன்பு, ஐ >வியப்பு, வீ>பறவை, மீ > மேலே , தே > நாயகன் )
ஒற்றை தமிழ் எழுத்திற்கு அர்த்தங்கள்

அ ===> எட்டு
ஆ ===> பசு
ஈ ===> கொடு, பறக்கும் பூச்சி
உ ===> சிவன்
ஊ ===> தசை, இறைச்சி
ஏ ===> அம்பு
ஐ ===> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ ===> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா ===> சோலை, காத்தல்
கூ ===> பூமி, கூவுதல்
கை ===> கரம், உறுப்பு
கோ ===> அரசன், தலைவன், இறைவன்
சா ===> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ ===> இகழ்ச்சி, திருமகள்
சே ===> எருது, அழிஞ்சில் மரம்
சோ ===> மதில்
தா ===> கொடு, கேட்பது
தீ ===> நெருப்பு
து ===> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ ===> வெண்மை, தூய்மை
தே ===> நாயகன், தெய்வம்
தை ===> மாதம்
நா ===> நாக்கு
நீ ===> நின்னை
நே ===> அன்பு, நேயம்
நை ===> வருந்து, நைதல்
நொ ===> நொண்டி, துன்பம்
நோ ===> நோவு, வருத்தம்
நௌ ===> மரக்கலம்
பா ===> பாட்டு, நிழல், அழகு
பூ ===> மலர்
பே ===> மேகம், நுரை, அழகு
பை ===> பாம்புப் படம், பசுமை, உறை
போ ===> செல்
மா ===> மாமரம், பெரிய, விலங்கு
மீ ===> ஆகாயம், மேலே, உயரம்
மு ===> மூப்பு
மூ ===> மூன்று
மே ===> மேன்மை, மேல்
மை ===> அஞ்சனம், கண்மை, இருள்
மோ ===> முகர்தல், மோதல்
யா ===> அகலம், மரம்
வா ===> அழைத்தல்
வீ ===> பறவை, பூ, அழகு
வை ===> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ ===> கௌவுதல், கொள்ளை அடித்தல்


Saturday, 4 February 2012

என்மனமும்
விதை போல இருந்திருந்தால்
வெளிகாட்டியிருப்பேன்
பூட்டிவைக்காமல்..!
என்மனது முழுவதுமாய் நீதானென்று....!!
-இரா.சுதர்சன்    

அனைத்திற்கும் எல்லை
என்னிடம் உண்டு..!
உன் நினைவுகளின் மேல்
வைத்துள்ள காதலை தவிர்த்து....!!
-இரா.சுதர்சன்
வீரனும் கோழையாகி விடுகிறான்..!
காதலெனும் விடைக்காக
காதலோ என்று
கேள்வி எழுப்பும்போது....!!
-இரா.சுதர்சன்

எனக்கு  உயிராய் 
என் கவிதைக்கு உருவாய்
இருந்தவள்
ஓர் வார்த்தையில் உதறிச்செல்ல..
என் உயிர் பிரிந்து
என் உருவான கவிதை மட்டுமிங்கே....!!
-இரா.சுதர்சன்  


நிமிரிந்து சென்றவன்
நிலை கெட்டுக்கிடக்கிறான்..!
சரக்கு ரயில்....!!
-இரா.சுதர்சன் 
காதல்..
கல்லறை ஏற்றும்
ஞாலத்தின் காலன்....!!
-இரா.சுதர்சன் 
காதல்..!
அள்ளி அள்ளி
பருகவேண்டிய அமிர்தமில்லை
அளந்து பருகவேண்டிய
நஞ்சான மருந்து....!!
-இரா.சுதர்சன் 
தெளிந்த குளத்தை
கலங்க வைக்கும் கல்லைப்போல 
என் மனதில் நீ வந்து போக
கலங்குகின்றது என் கண்கள்....!!
-இரா.சுதர்சன் 
இரவில்லாமல் விடியலேது..!
துன்பம் கண்டு துவளாதே
தீமை கண்டு அஞ்சாதே
இருளிலிருக்கும் உனக்கு 
நிச்சயம் ஓர் விடியல் உண்டு
நம்பிக்கை என்னும் ஒளியில்....!!
-இரா.சுதர்சன் 
கற்பனைகள்..!
புதிர் நிறைந்ததோர் புதர்க்குழிகள்....!!
-இரா.சுதர்சன்  
எனக்கு காதலை கற்ப்பித்தவள்
என் முதல் பார்வையின்
பரிமாற்றத்தில் இருந்தே..
என்னையும் கடவுளாக்கி பார்த்தவள்
அவளின் கருவறையில் வைத்து..!
என்ன தவம் செய்தேனோ
இவளை நான் தாயாய் பெறுவதற்கு....!!
-இரா.சுதர்சன்