Sunday, 22 July 2012


தப்பு கணக்கு.....

      பொருட்கள் உருளும் சத்தத்தை கேட்ட மணிமேகலை தூக்கத்திலிருந்து கண்விழித்தெழுந்து மின்விளக்கை ஒளிரவிட்டார், மியாவ் மியாவ் என்று மெல்லிய குரலில் கத்திக்கொண்டு மதுவின் செல்லப்பூனை ஓடியது, மணிமேகலை சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணியை காட்டியது உடனே தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் மதுவை எந்திரி கண்ணு பருச்ச  இருக்குது நேரமா எழுப்ப சொன்னியே எந்திரி கண்ணு என்று தன் மகனை செல்லமாக எழுப்பினார் மணிமேகலை ம்ம்.... டைம் என்ன மா என்றான் மது நாலாச்சு மது என்றார் மதுவோ பத்து நிமிசம் தூங்கிக்கிறேன் மா அப்புறமா எழுப்பு என்று கூறி மீண்டும் உறங்க ஆரம்பித்தான்,பத்து நிமிடதிர்க்குப்பிறகு  மணிமேகலை மதுவை எழுப்ப மதுவோ ரெண்டு நிமிசம் தா தூங்குனேன் அதுக்குள்ள பத்து நிமிசம் ஆயிடுச்சா என்ன கொடுமடா சாமி இது என்று கட்டிலில் படுத்தவாறே அரை தூக்கத்தில் புலம்பிக்கொண்டு அம்மா டீ மா என்றான், அஞ்சு நிமிசம் கொண்டு வந்து தரேன் நி அதுக்குள்ள படிக்க ஆரம்பி கண்ணு என்று கூறி சமயலறைக்குள் சென்றார் மணிமேகலை,

      கணக்கு, அனைத்துப்பாடங்களிலும் எப்படியோ தேறிவிடும் மது கணக்கு பாடத்தில் மட்டும் கொஞ்சம், இல்லை இல்லை மிகவும் மட்டம் தான், கணக்கு  புத்தகத்தை புரட்டி புரட்டிப்பார்த்தான் மது ஒன்றும் விளங்கா நிலையில் இதமாய் குளித்துவிட்டு பதமாய் சிற்றுண்டியையும் முடித்துவிட்டு மா நா பள்ளி கூடத்துக்கு போயிட்டு வரேன் மா என்று மணிமேகலையிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டான் மது,


        பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா  நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் வகுப்பறை நோக்கி சென்றான் மது, வகுப்பின் முகப்பருகே தனது நெருங்கிய நண்பர்களான மோகன், நிஷா, அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோர் முகம் தளர்ந்தது அமர்ந்துக்கொண்டிருக்க அவர்களின் அருகே சென்ற மதுவிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது நண்பர்களின் முகங்கள், நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்த மது சந்தோசமாக என்னடா எல்லாரும் எதையோ தொலச்சுட்டு உக்காந்து இருக்கீங்க போல என்று கேட்க மோகனோ எதுவுமே படிக்கலடா மாமா பெயில் ஆயிருவோமொனு பயமா இருக்கு பொண்ணுக முன்னாடி மானம் போக போகுதுடா மாமா என்று வருத்தத்தோடு கூற மதுவின் மனமோ பட்டாம்பூச்சி போல பட படவென பறந்தது முகம் புதிய மலரைப்போல மலர்ந்தது, டேய் மோகன் நீ தா  நல்லா படிக்குற பையனாச்சே நீயே இப்புடி சொன்ன எப்புடி டா என்று கூறி வருந்துவதைப்போல் நண்பன் படிக்கவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டான் மது, நீ சந்தோசமா இருக்குறத பாத்தா நல்லா படுச்சுட்டு வந்துருப்ப போல என்ன விசயம் மது என்றால் அன்னபூரணி , இல்ல பூரணி நானும் படிக்கல எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் கூட இல்லையேனு நெனச்சேன் ஆனா இங்க தா ஒன்னுக்கு அஞ்சு பேர இருக்கீங்களே அதான் சந்தோசமா இருக்கேன் ஹா ஹா ஹா ஹா என்று மது வாய்விட்டு சிரிக்க டேய் வாய்குள்ள கொசு போயரபோகுது கொஞ்ச மூடுங்க சார் என்றான் அசோக், சிரிப்பை சற்று அடக்கிய மதுவிடம் ஏன்டா பெயில் ஆயிட்ட பொண்ணுக முன்னாடி மானம் போகுமுன்னு கூட இல்லாம எப்புடி டா இப்புடி சிரிக்கிற என்றான் சசி பின்ன எம்மானம் மட்டும் போன சங்கடப்படலாம் படிக்கிற பசங்க உங்க மானமும் என்கூட சேந்து போக போகுதுன்னு நெனைக்கும் போது ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்குடா சசி நம்மதான்டா உண்மையான இணைபிரியா நண்பர்கள் என்றான் மது சிரித்துக்கொண்டே,

 மாணவ மாணவிகள் பரபரப்பாக பரிட்சைக்கு படித்துக்கொண்டிருக்க மணி ஒன்பது பதினைந்தை தொட பரிட்சை அறைக்கு செல்ல மணி ஒலித்தது மதுவும் அவனது நண்பர்களும் தங்களின் முகங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டு பரிட்சை அறைக்குள் சென்று பரிட்சை எண்னை சரிபார்த்து அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தனர் தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த நன்றாக படிக்கும் தன் மாமன் மகளான அஞ்சலியிடம் என்ன அஞ்சு நல்லா படுச்சுட்டு வந்தியா பருட்சைய நீ நல்லா எழுதுனாதா மாமா பாஸ் பண்ணமுடியும் புருஞ்சுச்சா, உனக்கு புருஞ்சுருக்குமுன்னு நெனைக்கிறேன் என்றான் சற்று பவ்வியமாக,டேய் மாமா இது எக்சாம் ஹால் கொஞ்ச பேசாமதா இரேண்டா எழுதும்போது கண்டிப்பா ஏன்சர் சீட்ட  காமிக்கிறேன் போதுமா  என்றால் அஞ்சு, மாமா மேல எம்புட்டு பாசம் என் செல்லத்துக்கு என்று கூறி புன்னகைத்துக்கொண்டான் மது, மணி ஒன்பது முப்பதாக சில நிமிடங்களே இருந்த நிலையில் பரிட்சையறைக்கு எந்த ஆசிரியரும் வராத நிலை, மதுவும் அவனது நண்பர்களை தவிற அனைவரும் சற்று பதட்டமாகவே இருந்தனர் மணி ஒன்பது முப்பதை தொட்டது பள்ளியின் அருகே  ஒரு தொழிற்சாலையில் இருந்து சங்கு சத்தம் ஒலித்தது என்னடா இது பருட்சை எழுத்தருக்கு முன்னாடியே ரிசல்ட சொல்றானுகளே என்று சொல்லி மதுவும் அவனது நண்பர்களும் ஒருவரை ஒருவர் முகங்களை பார்த்து  சிரித்துக்கொண்டிருக்க, தமிழ் ஆசிரியர் பிரபு கேள்வித்தாள்களை பரிட்சையறைக்குள் எடுத்து வந்தார் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் அய்யா என்று சொல்லி அமர்ந்தனர், ஆசிரியர் பிரபுவை பார்த்ததும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக மதுவும் அவனது நண்பர்களுக்கும் மிகுந்த சந்தோசம், காரணம் பிரபு அமைதியான இடமொன்று கிடைத்தால் போதுமென்று சற்று இளைப்பாரிக்கொள்பவர் பரிட்சையறை அமைதியாக இருப்பதினால் அங்கும் அவர் தூங்குவதை வழக்கமாக கொண்டவர், எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், பிரபு கணக்கு வினாத்தாள்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார், வினாத்தாளை வழங்கிவிட்டு யாரும் பிட் அடிக்கக்கூடாது மீறி பிட் அடுசீங்கன்னு தெருஞ்சுது பேப்பர கிளுச்சு வீசிட்டு வீட்டுக்கு அனுபுச்சுருவேன் பாத்துக்குங்க என்று ஏக வசனத்தை பேசி சிறிது நேரம் அங்குமிங்குமாய் பரிட்சையறையில் நடந்துவிட்டு ஆசிரியர்களுக்காக ஒதுகப்படிருந்த நாற்காலியில் அமர்ந்தார், மதுவின் கால்களில் கொசுக்கடிக்க சற்று குனிந்து சொரிந்துக்கொண்டன் மது , அதை பார்த்த பிரபு என்னவேணும் மது என்றார், ஒனுமில்லயா என்றான், என்ன என்ன சொன்ன சொல்லு என்றார் பிரபு, ஒன்றுமில்லை கொசு கடித்துவிட்டது அய்யா என்றேன் அய்யா என்றான் மது கிண்டலாக, பிரபுவும் நாற்காலியில் அமர்ந்தவாரே தூங்க ஆரம்பித்தார், பிரபு தூங்க ஆரம்பித்ததும் அஞ்சுவை பார்த்து தேர்ச்சியாகும் அளவிற்கு மட்டும் விடையளித்தான் மது, மதுவின் நண்பர்களாகிய மோகன்,நிஷா, அசோக்,அன்னபூரணி மற்றும் சசியும் அருகிலிருந்தவர்களை பார்த்து  நல்லதொரு மதிப்பெண் பெருமளவிற்கு எழுதினார்கள், மணி பன்னிரெண்டை தொட்டது பரிட்சைகான நேரம் முடிவடைந்ததும் விடைத்தாள்களை சேகரிக்க ஆரம்பித்தார் பிரபு விடைத்தாள்களை சமர்பித்துவிட்டு மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் எதோ போரில் வெற்றி வாகை சூடிய  வீரர்களைப்போல,

  மதுவும் நண்பர்கள் மோகன்,நிஷா,அசோக்,அன்னபூரணி மற்றும் சசியும் வக்குப்பறையை விட்டு வெளியே செல்ல, நட்புகளே பருட்சை எப்புடி இருந்துச்சு? பயந்துட்டே இருந்தோம் ஆனா பாதீங்களா எவ்வளவு சப்பையா முடுஞ்சுபோசுன்னு அதான் எப்பவுமே பாசிட்டிவா திங்க் பன்னனுமுன்னு சொல்றது என்று மது பேச்சை தொடங்க ஆமாண்டா மாமா நா அறுபது மார்க் வாங்கிருவேன் போலடா அன்போட பேப்பர பாத்து நல்லா எழுதிருக்கேன்டா என்று மோகன் கூற நா பாஸ் ஆகுற அளவுக்குதாண்ட எழுதுனேன் நா நெறைய மார்க் வாங்குனேன்னா இவ எப்புடி இவ்வளவு மார்க் வாங்குனானு தேவையில்லாத சந்தேகம்தான்டா வரும் அதனாலதா என்று மதுக்கூற டேய் மது அப்ப தப்ப சரியா பன்னிட்டு வந்துருக்கேன்னு சொல்லுடா என்றான் அசோக், ஹா ஹா அரசியல்ல இது எல்லாம் சாதாரணம்டா அசோக் என்றுபேசிக்கொண்டே பேருந்து நிலையத்தை நோக்கி நடையை ஆரம்பிக்க மதுவின் முதுகில் செல்லமாய் ஒரு அடி விழுந்தது அது தன் மாமன் மகள் அஞ்சலியென்று திரும்பிப்பார்க்க அது மணிமேகலை, ஆச்சிரியத்தில் மது சத்தமாக அம்மா !! நீ எங்க இங்க என்றான் , டேய் கண்ணு உனக்கு என்னடா ஆச்சு எந்திரி அம்மா உனக்கு டீ கொண்டுவந்துருக்கேன் போய் பல்லு தேச்சுட்டு வந்து டீய குடுச்சுட்டு நல்லா படி, இங்கப்பாரு கால்ல கொசு எப்புடி கடுச்சுருக்குன்னு இது கூட தெரியாம அப்புடி என்னதான் தூக்கமோபோ என்று கூறிக்கொண்டு வாசலை சுத்தம் செய்ய கிளம்பினாள் மணிமேகலை,
   
   அப்ப நா கணக்கு பரிட்சை எழுதி முடுச்சுட்டு வந்தது எல்லாமே கனவா !! அய்யகோ கடவுளே என்னடா இது விளையாட்டு என் பரிட்சைக்கூட என்று புலம்பிக்கொண்டு கணக்கு புத்தகத்தை எடுத்தான், தேநீர் குடித்தவாறே கணக்கு குறிப்பெழுதிய புத்தகத்தையும் எடுத்து புரட்டி புரட்டிப்பார்த்தான் மது ஒன்றும் விளங்காமல் பள்ளிக்கு நேரமான நிலையில் இதமாய் குளித்துவிட்டு பதமாய் சிற்றுண்டியையும் முடித்துவிட்டு மா நா பள்ளி கூடத்துக்கு போயிட்டு வரேன் மா என்று மணிமேகலையிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டான் மது, பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா  நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் தனது நண்பர்களான மோகன்,நிஷா  அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோரை நோக்கி வகுப்பறைக்கு சென்றான் மது....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 18 July 2012

கேட்டாயா,
பௌர்ணமி சந்திரனை  
ரசிக்காதே என்றேன் 
இப்பொழுது அவனும் 
என்னைப்போல தினம் தினம் 
உருகிக்கொண்டே போகிறான்....!!
-இரா.சுதர்சன் 
நல்லதம்பி.......
     
        இருபத்தி மூன்று வயது நல்லதம்பி தன் பெயருக்கு அப்படியே நேர்மாறான தம்பி இந்த நல்லதம்பி, மிகுந்தகோபம்,பிடிவாதம்,பொறுமையின்மை, தலைகணம் என்று தன்னைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகுமளவிற்கு மிகவும் நல்ல தம்பி.

        குடும்பத்தில் அவனது சித்தப்பா ராமசாமிக்கு மட்டும் சிறுவயது முதலே அவன் மேலான பாசமதிகம்  எனினினும் அவரை அவமானப்படுதிப்பார்ப்பதில் அலாதிப்ரியம் கொண்டவன் நல்லதம்பி.


       அது ஒரு வியாழன்கிழமை இரவு நேரம் அடைமழை பெய்துகொண்டிருக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டான் நல்லதம்பி, சார் என்ன மழையிலேயே கிளம்பி போறீங்க என்று சக ஊழியரிடமிருந்து வினா எழும்ப அலுத்துக்கொண்டே மாமா பையனுக்கு நாளைக்கு கல்யாணம் வீட்ல இருந்து சும்மா வா வானு தொந்தரவு அதான் கிளம்பிட்டேன் சார் என்றான், சக ஊழியரோ என்ன நல்லதம்பி மாமா பையன் கல்யாண முன்னு சொல்ற கண்டிப்பா போகனுமாச்சே நீ என்னடானா இப்புடி அலுதுக்குறியே என கூற, நான் ஒன்னும் சின்னப்புள்ளை இல்ல சார் கிளாஸ் எடுக்க, சேரி சார் ந கிளம்புறேன் என்று கூறி அலுவலகத்திலிருந்து விடை பெற்று தனது உடைமைகளை சுமந்தபடி சென்னை பேருந்து நிலையத்தை நோக்கி  புறப்பட்டான் நல்லதம்பி,


       தனது நண்பனின் மூலமாக தனியார் பேருந்தில் மதுரைக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த நல்லதம்பி மலையின் காரணமாக வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டான்  தனது தொலைபேசி ஒலித்தது அழைப்பையேற்று ஹலோ என்று பேச துவங்கினான் மறுமுனையில் சார் நா அசோக் ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன் சார் பஸ் இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பபோகுது கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லது சார் என்று கூற  ஓகே ஓகே நான் வந்தறேன் என்று கூறி அழைப்பை துண்டிக்க வீட்டிலிருந்து ராமசாமியும் தம்பி எங்கப்பா இருக்க சீக்கிரம் வா, உன்னை எல்லாரும் ரொம்ப எதிர்ப்பாதுட்டு  இருக்கோம் என்று கூற நெரிசலின்மேல் இருந்த கோவத்தை வேகமாக ராமசாமியிடம் காட்டினான் நல்லதம்பி, பத்து நிமிடத்திற்க்குப்பிறகு மீண்டும் கைப்பேசி ஒலித்தது ஹலோ என்று நல்லதம்பி ஆரம்பிக்க சார் நா அசோக் ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன் சார் பஸ் இப்ப  கிளம்பபோகுது சார் உங்க ஒருத்தருக்கு வேண்டி வெயிட் பண்ண முடியாது சார் உங்க டிக்கெட்ட வேற ஒருத்தருக்கு தந்துடோம் என்று கூறி தொடர்பை துண்டித்தார், ஒரு வழியாய் சென்னை மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த நல்லதம்பி பஸ் கிடைக்குமோ கிடைக்காதோ என்று புலம்பிக்கொண்டிருக்க மதுரைக்கு புறப்பட தயாராய் இருந்த பேருந்தை கண்டு சற்றே நிம்மதியடைந்தான் நல்லதம்பி.

              பேருந்தில் ஏறிய நல்லதம்பி ஆயிரம் ரூபாய் தாளை நீட்டியவாறே ஹலோ மதுரைக்கு ஒரு டிக்கெட் குடுப்பா என்றான் நடத்துனரிடம், என்னடா இவ  தம்மாதூண்டு இருந்துட்டு இப்புடி  பேசுரானே என்று புலம்பியவரே என்ன என்று வினவினார் நடத்துனர் மதுரைக்கு ஒரு டிக்கெட் என்றான், ஆயிர ரூபாய நீட்ற நா என்ன  சில்லரைய அச்சா அடிக்கறேன் சில்ற இருந்த குடுப்பா இல்லனா இறங்கி போய் சில் மாத்திட்டு வா என்று முகத்தில் அடித்தவாறு கூறி  நல்லதம்பியை முறைதுக்கொண்டர் நடத்துனர்.  


             சட்டேன்று பேருந்திலிருந்து இறங்கிய நல்லதம்பி அருகே இருந்த பூக்கடையில்  சில்லரை கேட்க ஆயிர ரூபாய்கு என்கிட்ட சேஞ் இல்லபா, கொஞ்ச அபுடீக வெளிய போன ஓயின் ஷாப் இருக்கு அங்க கேளு கேடைக்கு என்று கூற அருகே இருந்த மதுபாண கடைக்கு  சென்று அண்ணா ஆயிரம் ரூபாய்கு சேஞ் இருந்தா தாங்க நா என்று உரத்த குரலில் கூறிக்கொண்டே கூடத்தில் முந்தி அடித்து சென்றான் நல்லதம்பி, அங்கிருந்த ஊழியர் ஒருவர் கூட்டமா இருக்கும்போது தா சேஞ் வேணும் அது வேணும் இது வேணுமுன்னு வந்து நிப்பீங்களே ஓரமா நில்லு கூட்ட கொரயட்டு தரேன் என்றார், பேருந்து புறப்பட தயாராய் இருக்க அருகில் இருந்த உணவகத்தில் நல்லதம்பிக்கு சில்லரை கிடைக்க சற்று ஆறுதலாய் பேருந்தில் அமர்ந்து பயண சீட்டை வாங்கிக்கொண்டு நடத்துனரிடம் சார் பஸ் எப்ப மதுரைக்கு போய் ரீச் ஆகும் என்றான் எட்ற மணி நேரம் ஆகும் என்று கூற எப்படியோ தாலி கட்றதுக்கு முன்னாடி ரீச் ஆயிடலாம் என எனிக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தான், பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து நின்றுவிட நல்லதம்பியின் நாடி வேகமாக துடிக்க ஆரம்பித்தது, ஒரு வழியாக கோளாறு சரிசெய்யப்பட்டு பேருந்து மீண்டும் கிளம்ப கடவுளே என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டான்,


                பேருந்து மதுரை வந்தடைந்தது நல்லதம்பி அவசர அவசரமாக அருகே இருந்த திருமண மண்டபத்தை சென்றடைந்தான்  உடை ஏதும் மாற்றாமல் பற்களை துலக்கிவிட்டு முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு மணமேடையை நோக்கி சென்றான், நல்லதம்பியை கண்ட ராமசாமிக்கு அளவில்லா ஆனந்தம் ,ஏம்பா  லேட் ஆய்டுச்ச பரவல விடு கலச்சுப்போய் வந்துருப்ப முதல் நீ போய் டீ சாப்டுட்டு வா தம்பி என்று கூறக்கூற எதிர்ப்பாரா விதமாய்  நல்லதம்பியின் தந்தை முத்துப்பாண்டி நல்லதம்பியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை  வைத்தார் நடுனடுங்கிப்போனான் நல்லதம்பி இப்ப என்ன எதுக்கு நீங்க அடுசீங்க என்று கேட்க்க மீண்டும் ஒருமுறை அரைய  சென்ற பாண்டியை ராமசாமி தடுத்து நிறுத்தி தம்பி இப்ப என்ன பன்னிட்டானு அடிக்ககறீங்க என்று கேட்டார் இவன் பன்னிருக்க காரியத்த பாரு என்று நல்லதம்பியின் முதுகை திருப்பி காண்பித்தான் பாண்டி, சற்று புருவத்தை உயர்த்தி ஆச்சர்யத்துடன் அவன் சட்டையில் ஒட்டியிருந்த மதுபாண மூடியில் ஒட்டியிருக்கும்  மினுமினுப்பான சீட்டைப்பார்த்து சற்றே வாயடைதுப்போனான் ராமசாமி, நல்லதம்பியின் உறவினர்கள் அவனோட கண்ண பாரு  தண்ணி அடுசுருந்தாலும் அடுசுருப்பன் இவ இப்புடி செய்யற ஆளுதான் என்று ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேச தான்  குற்றமற்றவன் என்று  நிருபிக்க அவனால் இயலவில்லை பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை இவர்கள் பேசப்பேச நல்லதம்பியின் பிடிவாதம் பொறுமையிழந்து கோவம்  தலைகேறி நிற்க, ராமசாமி அனைவரயும் திட்டிவிட்டு நல்லதம்பியை தனியே அழைத்து சென்று பிடிவாதம் பன்னாத கோவத்த கன்ட்ரோல் பண்ணு  பொறுமயா என்ன  நடந்துச்சுன்னு சொல்லு என்றார் நல்லதம்பி நடந்ததை கூற உறவினர்கள் அதை ஏற்க்க மறுத்தனர் காரணம் சிறு வயதிலிருந்து அவனது கோவம் பொறுமையின்மை குறும்புத்தனம் பிடிவாதம் என அடிக்கிக்கொண்டே போகலாம், இதை அனைத்தையும் எடுத்துரைத்த ராமசாமியின் வார்த்தைகளை முதற்முறையாக பொறுமையுடன் காது கொடுத்து கேட்டான் நல்லதம்பி, பின்னர் நல்லதம்பியையும் அவனது உறவினர்களையும் சமாதானப்படுத்தினார் ராமசாமி, யாரும் தன்னை புரிந்துகொள்ளத நேரத்தில் தான் கூறிய உண்மைகளை பொறுமையாய் கேட்டு தன்னை புரிந்துகொண்டு தன்னையும் புரியவைத்த ராமசாமியை கண்களில் நீர் மல்க மல்க கட்டியனைதுக்கொண்டான் மனதில் தான் ராமசாமியை கடிந்துகொண்டதையும் எண்ணி....!!

-இரா.சுதர்சன்

Tuesday, 17 July 2012

மின்சாரமில்லா ஒளியாம்
உன் கண்களைக்கொண்டு..
பூவில்லா தேனாம் 
உன் இதழ்களை எடுத்துவா..
பசியில் காத்திருக்கிறேன்..!
இருட்டறையாம் தனிமையில்....!!
-இரா.சுதர்சன்  

பனிமலையும்
பாறைதான்..!
பகலவனிடம்
காதல் கொள்ளாதவரை....!!
-இரா.சுதர்சன் 
பெண்னே..
உனை காணும்போதெல்லாம் 
உன்னில் சிற்ப்பியாக 
என் காதல் சிலை 
வடிக்கவே நினைக்கிறது..!
ஒரு வேலை உன் இதயம் 
கல்லாய் இருப்பதாலோ என்னவோ....!!
-இரா.சுதர்சன் 

Thursday, 12 July 2012

அவன் பின்னால் அலைந்து
முகவரியை இழந்த எனக்கு
அவனால் கிடைத்த முகவரி
என் கன்னத்தில்..!
அவன் இரு வரி இதழ் 
முத்தமாக....!!
- இரா.சுதர்சன் 

Wednesday, 11 July 2012

தேவன் அடியார்களின்
பிள்ளைகள் போலப்பண்
ணீக்கள் பாசமாம்
பணத்தின் மீதேறி
பிறப்பை பிணமாக்கிக்காகித
குவியலை யாருக்கடைக்கிறாய்
அலிக்கவந்தவனே நீயலிந்தப்பின்
பதுகியப்பொருளனைத்தும் உனை
உயிர்ப்பிக்குமா இல்லை
உலகாலவைக்குமாவே
சிப்பெற்ற பிண்டுகளே
புனிதமென்று போர்வைப்போற்றி 
பணம் தின்ன பிணமாக்கும் பீடைகளே
பிறந்த நீயும் ஓர்நாள் பிரிவாய்
பாசமெனும் பணத்தை விட்டுப்புரிந்துகொள்..!!
-இரா.சுதர்சன்

Sunday, 8 July 2012

வருந்துகின்றேன்..
ஒரு முறையல்ல பலமுறை,,
ஆசை ஆசையாய்
அள்ளி அள்ளிப்பருகி
உடல் முழுவதுமாய் ஊறிப்போய்
போதையேறி  காற்றில் மிதந்தேன்
பல வருடமாய்..
நொடிப்பொழுதில்
நோக்கமின்றி உடைந்தது..
என் கையிலிருந்த 
மது அடைத்த
கண்ணாடி குடுவையல்ல..!
என் கள்ளமில்லா காதலும் அதை
அடைத்துவைத்திருந்த
என் இதயமும்....!!
-இரா.சுதர்சன்
மீண்டும் காதலிக்க துணிந்துவிட்டேன்..!
தோற்ற என் காதலின்
நீங்க நினைவுகளாம் 
வலி வேதனைகளை....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 3 July 2012

உனை நினைக்கும்பொழுது
கண்கள்மட்டுமல்ல
என் எழுதுகோலும் கூட வடிக்கிறது..!
கண்ணீர்க்கவிதைகளை....!!
-இரா.சுதர்சன்