நல்லதம்பி.......
இருபத்தி மூன்று வயது நல்லதம்பி தன் பெயருக்கு அப்படியே நேர்மாறான தம்பி இந்த நல்லதம்பி, மிகுந்தகோபம்,பிடிவாதம்,பொறுமையின்மை, தலைகணம் என்று தன்னைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகுமளவிற்கு மிகவும் நல்ல தம்பி.
குடும்பத்தில் அவனது சித்தப்பா ராமசாமிக்கு மட்டும் சிறுவயது முதலே அவன் மேலான பாசமதிகம் எனினினும் அவரை அவமானப்படுதிப்பார்ப்பதில் அலாதிப்ரியம் கொண்டவன் நல்லதம்பி.
அது ஒரு வியாழன்கிழமை இரவு நேரம் அடைமழை பெய்துகொண்டிருக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டான் நல்லதம்பி, சார் என்ன மழையிலேயே கிளம்பி போறீங்க என்று சக ஊழியரிடமிருந்து வினா எழும்ப அலுத்துக்கொண்டே மாமா பையனுக்கு நாளைக்கு கல்யாணம் வீட்ல இருந்து சும்மா வா வானு தொந்தரவு அதான் கிளம்பிட்டேன் சார் என்றான், சக ஊழியரோ என்ன நல்லதம்பி மாமா பையன் கல்யாண முன்னு சொல்ற கண்டிப்பா போகனுமாச்சே நீ என்னடானா இப்புடி அலுதுக்குறியே என கூற, நான் ஒன்னும் சின்னப்புள்ளை இல்ல சார் கிளாஸ் எடுக்க, சேரி சார் ந கிளம்புறேன் என்று கூறி அலுவலகத்திலிருந்து விடை பெற்று தனது உடைமைகளை சுமந்தபடி சென்னை பேருந்து நிலையத்தை நோக்கி புறப்பட்டான் நல்லதம்பி,
தனது நண்பனின் மூலமாக தனியார் பேருந்தில் மதுரைக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த நல்லதம்பி மலையின் காரணமாக வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டான் தனது தொலைபேசி ஒலித்தது அழைப்பையேற்று ஹலோ என்று பேச துவங்கினான் மறுமுனையில் சார் நா அசோக் ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன் சார் பஸ் இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பபோகுது கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லது சார் என்று கூற ஓகே ஓகே நான் வந்தறேன் என்று கூறி அழைப்பை துண்டிக்க வீட்டிலிருந்து ராமசாமியும் தம்பி எங்கப்பா இருக்க சீக்கிரம் வா, உன்னை எல்லாரும் ரொம்ப எதிர்ப்பாதுட்டு இருக்கோம் என்று கூற நெரிசலின்மேல் இருந்த கோவத்தை வேகமாக ராமசாமியிடம் காட்டினான் நல்லதம்பி, பத்து நிமிடத்திற்க்குப்பிறகு மீண்டும் கைப்பேசி ஒலித்தது ஹலோ என்று நல்லதம்பி ஆரம்பிக்க சார் நா அசோக் ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன் சார் பஸ் இப்ப கிளம்பபோகுது சார் உங்க ஒருத்தருக்கு வேண்டி வெயிட் பண்ண முடியாது சார் உங்க டிக்கெட்ட வேற ஒருத்தருக்கு தந்துடோம் என்று கூறி தொடர்பை துண்டித்தார், ஒரு வழியாய் சென்னை மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த நல்லதம்பி பஸ் கிடைக்குமோ கிடைக்காதோ என்று புலம்பிக்கொண்டிருக்க மதுரைக்கு புறப்பட தயாராய் இருந்த பேருந்தை கண்டு சற்றே நிம்மதியடைந்தான் நல்லதம்பி.
பேருந்தில் ஏறிய நல்லதம்பி ஆயிரம் ரூபாய் தாளை நீட்டியவாறே ஹலோ மதுரைக்கு ஒரு டிக்கெட் குடுப்பா என்றான் நடத்துனரிடம், என்னடா இவ தம்மாதூண்டு இருந்துட்டு இப்புடி பேசுரானே என்று புலம்பியவரே என்ன என்று வினவினார் நடத்துனர் மதுரைக்கு ஒரு டிக்கெட் என்றான், ஆயிர ரூபாய நீட்ற நா என்ன சில்லரைய அச்சா அடிக்கறேன் சில்ற இருந்த குடுப்பா இல்லனா இறங்கி போய் சில்ர மாத்திட்டு வா என்று முகத்தில் அடித்தவாறு கூறி நல்லதம்பியை முறைதுக்கொண்டர் நடத்துனர்.
சட்டேன்று பேருந்திலிருந்து இறங்கிய நல்லதம்பி அருகே இருந்த பூக்கடையில் சில்லரை கேட்க ஆயிர ரூபாய்கு என்கிட்ட சேஞ் இல்லபா, கொஞ்ச அபுடீக வெளிய போன ஓயின் ஷாப் இருக்கு அங்க கேளு கேடைக்கு என்று கூற அருகே இருந்த மதுபாண கடைக்கு சென்று அண்ணா ஆயிரம் ரூபாய்கு சேஞ் இருந்தா தாங்க நா என்று உரத்த குரலில் கூறிக்கொண்டே கூடத்தில் முந்தி அடித்து சென்றான் நல்லதம்பி, அங்கிருந்த ஊழியர் ஒருவர் கூட்டமா இருக்கும்போது தா சேஞ் வேணும் அது வேணும் இது வேணுமுன்னு வந்து நிப்பீங்களே ஓரமா நில்லு கூட்ட கொரயட்டு தரேன் என்றார், பேருந்து புறப்பட தயாராய் இருக்க அருகில் இருந்த உணவகத்தில் நல்லதம்பிக்கு சில்லரை கிடைக்க சற்று ஆறுதலாய் பேருந்தில் அமர்ந்து பயண சீட்டை வாங்கிக்கொண்டு நடத்துனரிடம் சார் பஸ் எப்ப மதுரைக்கு போய் ரீச் ஆகும் என்றான் எட்ற மணி நேரம் ஆகும் என்று கூற எப்படியோ தாலி கட்றதுக்கு முன்னாடி ரீச் ஆயிடலாம் என எனிக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தான், பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து நின்றுவிட நல்லதம்பியின் நாடி வேகமாக துடிக்க ஆரம்பித்தது, ஒரு வழியாக கோளாறு சரிசெய்யப்பட்டு பேருந்து மீண்டும் கிளம்ப கடவுளே என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டான்,
பேருந்து மதுரை வந்தடைந்தது நல்லதம்பி அவசர அவசரமாக அருகே இருந்த திருமண மண்டபத்தை சென்றடைந்தான் உடை ஏதும் மாற்றாமல் பற்களை துலக்கிவிட்டு முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு மணமேடையை நோக்கி சென்றான், நல்லதம்பியை கண்ட ராமசாமிக்கு அளவில்லா ஆனந்தம் ,ஏம்பா லேட் ஆய்டுச்ச பரவல விடு கலச்சுப்போய் வந்துருப்ப முதல் நீ போய் டீ சாப்டுட்டு வா தம்பி என்று கூறக்கூற எதிர்ப்பாரா விதமாய் நல்லதம்பியின் தந்தை முத்துப்பாண்டி நல்லதம்பியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார் நடுனடுங்கிப்போனான் நல்லதம்பி இப்ப என்ன எதுக்கு நீங்க அடுசீங்க என்று கேட்க்க மீண்டும் ஒருமுறை அரைய சென்ற பாண்டியை ராமசாமி தடுத்து நிறுத்தி தம்பி இப்ப என்ன பன்னிட்டானு அடிக்ககறீங்க என்று கேட்டார் இவன் பன்னிருக்க காரியத்த பாரு என்று நல்லதம்பியின் முதுகை திருப்பி காண்பித்தான் பாண்டி, சற்று புருவத்தை உயர்த்தி ஆச்சர்யத்துடன் அவன் சட்டையில் ஒட்டியிருந்த மதுபாண மூடியில் ஒட்டியிருக்கும் மினுமினுப்பான சீட்டைப்பார்த்து சற்றே வாயடைதுப்போனான் ராமசாமி, நல்லதம்பியின் உறவினர்கள் அவனோட கண்ண பாரு தண்ணி அடுசுருந்தாலும் அடுசுருப்பன் இவ இப்புடி செய்யற ஆளுதான் என்று ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேச தான் குற்றமற்றவன் என்று நிருபிக்க அவனால் இயலவில்லை பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை இவர்கள் பேசப்பேச நல்லதம்பியின் பிடிவாதம் பொறுமையிழந்து கோவம் தலைகேறி நிற்க, ராமசாமி அனைவரயும் திட்டிவிட்டு நல்லதம்பியை தனியே அழைத்து சென்று பிடிவாதம் பன்னாத கோவத்த கன்ட்ரோல் பண்ணு பொறுமயா என்ன நடந்துச்சுன்னு சொல்லு என்றார் நல்லதம்பி நடந்ததை கூற உறவினர்கள் அதை ஏற்க்க மறுத்தனர் காரணம் சிறு வயதிலிருந்து அவனது கோவம் பொறுமையின்மை குறும்புத்தனம் பிடிவாதம் என அடிக்கிக்கொண்டே போகலாம், இதை அனைத்தையும் எடுத்துரைத்த ராமசாமியின் வார்த்தைகளை முதற்முறையாக பொறுமையுடன் காது கொடுத்து கேட்டான் நல்லதம்பி, பின்னர் நல்லதம்பியையும் அவனது உறவினர்களையும் சமாதானப்படுத்தினார் ராமசாமி, யாரும் தன்னை புரிந்துகொள்ளத நேரத்தில் தான் கூறிய உண்மைகளை பொறுமையாய் கேட்டு தன்னை புரிந்துகொண்டு தன்னையும் புரியவைத்த ராமசாமியை கண்களில் நீர் மல்க மல்க கட்டியனைதுக்கொண்டான் மனதில் தான் ராமசாமியை கடிந்துகொண்டதையும் எண்ணி....!!
-இரா.சுதர்சன்

No comments:
Post a Comment