Friday, 25 March 2016

நிழல்.. (நித்திரையும் - நண்பனும், பகுதி - 4, ஒளி - 3)

விரிந்த தாமரை போல் பிரகாசமாய் புன்னகைக்கும் பௌர்ணமி இரவு அது, வயிற்றுப் பிழைப்பிற்க்காக வேறு வழியின்றி வெளியூரில் வேலைபார்த்து வந்தவன், உயிரான நண்பனோடு காற்றாடகயிற்றுக்கட்டிலில் படுத்தவாறே கதை பேசிகொண்டிருந்தான், தூரத்தே மெல்லியதோர் தேன் குரலில் அவன் பெயர் இரு முறை ஒலிக்க, ஒரு நிமிசம் இருடா யாரோ என்ன கூப்டுற மாதிரி இருக்கு பாத்துட்டு வரேன் எனக்கூறி  முற்றத்தை நோக்கி விரைவாக மூன்றாமடி எடுத்து வைக்க கால்கள் இடறி அம்மா... என்று அலறிக்கொண்டே  கீழே விழுந்தான், பதறிப்போன தாயோ வேகமாய் அருகே வந்து, பாத்து நிதானமா போக கூடாதா என பச்சிளம் குழந்தையை போல தோள்களை பிடித்து தூக்கியவாரே அடி கிடி ஏதும் பட்டுருச்சாப்பா ? என்று வினவ இல்லமா அடி எதும் படல என்றான், அவனது நண்பனோ என்னடா உளற என சற்றே அதட்ட, கட்டிலில் இருந்து கீழே  விழுந்ததை உணர்ந்த அவனின் தூக்கம் களைந்தது போல தற்காலிக சொர்கமும் ! விரிந்த தாமரை போல் பிரகாசமாய் தாங்கி பிடித்த நண்பனின் கைகளை தவிர !!

- இரா.சுதர்சன்

Friday, 18 September 2015

நிழல்.. (அவனும் - அவனது மாற்றமும், பகுதி - 3 ஒளி - 2)

நிழல்..
(அவனும் - அவனது மாற்றமும்,
பகுதி - 3 ஒளி - 2)

மாட மாளிகை கட்டி
மண் பொருள் சேர்க்க ஆசையில்லை..
மனிதனாக வாழ மட்டும்...!

சிறையில் இருந்து வீடு திரும்பியவன் என்னதான் துன்பம் அனுபவித்திருந்தாலும் பணத்தின் மீதான குறிக்கோள் அவன் மனதிலிருந்து சிறிதளவும் மாறவில்லை, குடும்பத்தார் உற்றார் உறவினர் நண்பர்கள் என எவர் பேச்சையும் கேட்காது அனைவரயும் கைகழுவி விட்டு  பெட்டிப் படுக்கையுடன் வெளியூர் புறப்பட்டான்.

ஆனால் இனி ஒருபோதும் தவறான பாதையில் சென்று மட்டும் பணம் சம்பாரிப்பதில்லை என உறுதி பூண்டான்.

தான் எண்ணியது போல நல்லதோர் வேலையிலும் அமர்ந்தான், இரவு பகல் பாரது உழைக்க ஆரம்பித்தான் சிறுக சிறுக பணம் சேர குடும்பத்தார் உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைவரையும் மறந்தான், அவன் நினைத்தவாரே சொகுசான  ஆடம்பர வாழ்கையை வாழ ஆரம்பித்தான்.

காலங்கள் கடந்து சென்றது.. ஓர் நாள் படுக்கையை விட்டு விலகமுடியாத அளவிற்கு  தீடிர் உடல் நல குறைவு ஏற்பட்டது, தண்ணீருக்காக தவித்தது அவன் வரட்சியான நாக்கு.. கூப்பிடும் தொலைவில் யாருமில்லை.. இப்போது நம்முடன் யாரேனும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவன் மனம் அசைபோட்டது, சாதாரண இருமலுக்கு மருத்துவமனைக்கு செல்லலாம் வா என்றும் தேனும் துளசி சாரும் கலந்து தந்த கூட்டுக் குடும்பத்தாரையும் சற்றே நினைத்துப் பார்த்தான், பாசத்திற்கு முன் பணமென்பது ஒரு பெரிய விசயமே அல்ல என எண்ணினான் மனம் வருந்தி கண்கள் கலங்கிய அவனின் வறண்ட நாக்கை கண்ணீர் துளிகள் ஈரப்பதமாக்கியது.!!

-இரா.சுதர்சன் 

Saturday, 29 August 2015

நிழல்.. (அவனும் - அவனது ஏமாற்றமும், பகுதி - 2 ஒளி -1)

நிழல்..
(அவனும் - அவனது ஏமாற்றமும், பகுதி - 2 ஒளி -1)

நம்மை நாமே தான் ஏமாற்றிக்கொள்கிறோம் !
அவன் இருப்பிடத்தின் அருகே உள்ள பணம் படைத்த சுற்றத்தாரின் நடவடிக்கைகள், அவர்களின் வாழ்க்கை முறைகள் என ஒவ்வொன்றையும் பார்த்த அவன் தானும் அவ்வாறே வாழ விரும்பினான், ஆனால் நடுத்தர வர்கத்தில் பிறந்த அவனால் அது இயலுமா என்றால் அது கேள்விக்குறியே !
தன் சம்பாத்தியத்தில் இவை ஏதும் சாத்தியமில்லை என்றரிந்தவனை வஞ்சகமாய் தன் வலைக்குள் இழுத்தது சில குறுக்கு வழிகள். வீடு குறுகிட்டது சொந்தங்கள் தடையிட்டது சற்றும் பொருட்படுத்தாது பொருளீட்ட பெறு நடைபோட்டன உங்களுக்கவும் தான் செல்கிறேனென்று. தான் என்னியதைப்போல் குறுக்கு வழியில் பழுதடைந்த பணமெனும் பரணை அடைய ஒவ்வொரு படியாக ஏறினான், பரணை நெருங்க நெருங்க இனம் புரியாதோர் சந்தோஷத்தில் மூழ்கினான். பணத்தின் மீது மோகம் கொழுந்து விட்டு எரிய, அவன் சந்தோசத்தின் உட்சம் என்றிருந்த பந்த பாசங்கள் யாவும் விட்டில் பூச்சியாய் பொசுங்கின !
பழுதடைந்த பரண் எவ்வளவுதான் பாரம் தாங்கும் அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா ! பாரம் தாங்காமல் ஓர் நாள் அந்த பரண் உடைந்தது தான் இருந்த தரையையும் மீறி அதல பாதலத்திர்க்கே அழைத்துச் சென்றது !

வீடு வெறுக்க சொந்தங்கள் தூற்ற சுற்றார்கள் சிரிக்க அவன் கழுத்தை நெரிக்கும் கயிறாய் அமைந்தது அவன்  பணம் தேடி சென்ற குறுக்குவழி !

தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு, குடும்பம் சொந்தம் வெறுக்க பணம் மட்டுமே  வாழ்க்கை இல்லை என தன்நிலை உணர்ந்தான் தலை கவிழ்ந்தான் !

அவன், தான் தரையில் நடப்பவன் என்ற நிலையை மறந்து ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான்.
ஆசை தவறல்ல ஆனால் ஆசைக்கான ஆயத்த படிகளை கணக்கிட்டு அதன் படி நேர்மையான பாதையில் பயணித்தல் மிக அவசியம் என்பதை மட்டும் அவன் மறந்துவிட்டான் !!

- இரா.சுதர்சன்

Friday, 14 August 2015

நிழல்.. (அவனும் - அவனது நண்பனும், பகுதி - 1 )


நிழல்
(அவனும் - அவனது நண்பனும், பகுதி - 1 )



அதீத ஆசையுள்ள சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நிம்மதியென்பது இருளில் நிழல் போலவே !


குடும்ப வாழ்க்கை, உற்றார் உறவினர்கள், நல்ல நண்பர்கள், பிறந்தநாள், பண்டிகைகள், சுக துக்க நிகழ்சிகள் என ஏதுமில்லாது தளர்ந்துபோய் இத்தனையும் ஒருசேர பெற்று ஓரிடத்தில் ஆணித்தனமாக வேரூன்ற நினைப்பவனவன் .


நடுத்தர குடும்பம், சாதாரண மேற்ப்பார்வையாளரான தந்தை, தந்தையின் தொடர் பணியிட மாற்றங்கள் என விடுதியில் தங்கி தனது பள்ளி பருவத்தை தொடங்கியவன் வெவ்வேறு பள்ளி கல்லூரிகள் என ஊர் ஊராக ஒரு நாடோடி போல சுற்றி தனது படிப்பை முடித்தான். பட்டப்படிப்பை முடித்த கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தனது சொந்த ஊரை விட்டு ஆயிரம் மயில்கள் கடந்து போய் பணியிலும் அமர்ந்தான்.


தொழில்நுட்ப வளர்ச்சிகளால் தொலைபேசி, ஒளிப்பேசி, சமூக வலைத்தளங்கள் என இருந்தாலும் அவைகளின் உதவியால் அவ்வப்போது குடும்பத்தாருடன் பேசி தற்காலிகமான மகிழ்ச்சி கொண்டான்.
விதி யாரைத்தான் விட்டது, அலுவலக நண்பர்களிடம் அளவு கடந்து நட்பு கொண்டாடினான் ஆயினும் தாமரை இலை மேல் நீர் போல ஒட்டியும் ஒட்டாத அலுவலக நண்பர்கள் மத்தியில் மிகவும் வெறுத்துப்போனான்.


அவன் பணியாற்றும் அன்னிறுவனமும் அவனை தனது தலைமை அலுவலகத்தில் ஆறு மாதம் வெளியூரில் உள்ள கிளை அலுவலகத்தில் ஆறு மாதம் என அலைகழிக்க ஆரம்பித்தது.
வேலையை வெறுத்து பணியினை ராஜினாமா செய்யத் துணிந்த அவன் கண்களை தங்கையின் திருமணம்,கல்வி மற்றும் வீட்டிர்க்கான வங்கிக்கடன், என ஒரு சேர மறைத்தன.


தனிமை தனிமை என தனக்கென்ற ஓர் தனிமையான உலகத்தில் வெறுத்துப்போன அவன், நடுஜாமத்தில் இருள் சூழ்ந்த தனது அறையில் கண்ணீர் பெருக்கெடுக்க மின்விசிறியை பார்த்துக்கொண்டே குடும்ப வாழ்க்கை, உற்றார் உறவினர்கள்,நல்ல நண்பர்கள், பிறந்தநாள், பண்டிகைகள், சுக துக்க நிகழ்சிகள் என அத்தனையும் ஒருசேர பெற்று ஓரிடத்தில் ஆணித்தனமாக தன்னை வேரூன்ற வேண்டும் என தன் ஆசைகளை அவனது உயிர் நண்பனான நிழலிடம் அசைபோட தொடங்கினான் எப்போதும்போல !!


- இரா.சுதர்சன்

Friday, 3 April 2015

ஆசையெனும் விஷமாம்
விளம்பரத்தில் வீழ்ந்து 
பணத்திற்க்காய் பயணிக்கும்
பாரபட்ச உலகில்
அன்பென்று அழைதல்
அடிமடையன் செயலன்றோ !!
-இரா.சுதர்சன் 

Wednesday, 4 February 2015

It’s Abhi’s Adventure..

It’s a gorgeous garden... Abhi was standing alone in the garden, the garden was surrounded with mild fog and drizzle of mist; Abhi felt it was a heaven, he spotted some waves in the fog, with a feather of bright white, a crowned beautiful angel slowly stepped towards him from the waves of fog.. he looks the eyes of the angel without blinking his eyes and became slightly unconscious with retort inside his body due to the beauty of the angel and finally he confirmed that it was the heaven, the angel went near to abhi, his nose is supposed to touch the nose of angel ! She slightly turned his face towards her honey dewed lips, her mild hot breathe caress abhis chin, abhi became flying cotton in air, and with the same touch she went near to his ear and started crowing stunningly like a rooster..! Abhi get shocked and waked suddenly from his bed with full of sweat as he is coming from a pool..! Again he heard the same crowing sound strikingly he just turned his head towards the window and he just looked his cock crowing marvelously for the morning sun as a welcome song! With a very strange smile by thinking the dream angel abhi went off to wash room... (Continues...)

Sunday, 25 January 2015

விரிந்த வானம்..
நிரைந்த கண்கள்..
வருடும் காற்று..
மெல்லிய சுவாசம்..
கடலாய் மனம்..
அலையாய் மகிழ்ச்சி..
தூரத்து பிறைநிலா..
ஒற்றையில் நான்..
கனா காலங்கள்..!
- இரா.சுதர்சன்