நிழல்..
(அவனும் - அவனது ஏமாற்றமும், பகுதி - 2 ஒளி -1)
(அவனும் - அவனது ஏமாற்றமும், பகுதி - 2 ஒளி -1)
நம்மை நாமே தான் ஏமாற்றிக்கொள்கிறோம் !
அவன் இருப்பிடத்தின் அருகே உள்ள பணம் படைத்த சுற்றத்தாரின் நடவடிக்கைகள், அவர்களின் வாழ்க்கை முறைகள் என ஒவ்வொன்றையும் பார்த்த அவன் தானும் அவ்வாறே வாழ விரும்பினான், ஆனால் நடுத்தர வர்கத்தில் பிறந்த அவனால் அது இயலுமா என்றால் அது கேள்விக்குறியே !
தன் சம்பாத்தியத்தில் இவை ஏதும் சாத்தியமில்லை என்றரிந்தவனை வஞ்சகமாய் தன் வலைக்குள் இழுத்தது சில குறுக்கு வழிகள். வீடு குறுகிட்டது சொந்தங்கள் தடையிட்டது சற்றும் பொருட்படுத்தாது பொருளீட்ட பெறு நடைபோட்டன உங்களுக்கவும் தான் செல்கிறேனென்று. தான் என்னியதைப்போல் குறுக்கு வழியில் பழுதடைந்த பணமெனும் பரணை அடைய ஒவ்வொரு படியாக ஏறினான், பரணை நெருங்க நெருங்க இனம் புரியாதோர் சந்தோஷத்தில் மூழ்கினான். பணத்தின் மீது மோகம் கொழுந்து விட்டு எரிய, அவன் சந்தோசத்தின் உட்சம் என்றிருந்த பந்த பாசங்கள் யாவும் விட்டில் பூச்சியாய் பொசுங்கின !
பழுதடைந்த பரண் எவ்வளவுதான் பாரம் தாங்கும் அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா ! பாரம் தாங்காமல் ஓர் நாள் அந்த பரண் உடைந்தது தான் இருந்த தரையையும் மீறி அதல பாதலத்திர்க்கே அழைத்துச் சென்றது !
வீடு வெறுக்க சொந்தங்கள் தூற்ற சுற்றார்கள் சிரிக்க அவன் கழுத்தை நெரிக்கும் கயிறாய் அமைந்தது அவன் பணம் தேடி சென்ற குறுக்குவழி !
தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு, குடும்பம் சொந்தம் வெறுக்க பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என தன்நிலை உணர்ந்தான் தலை கவிழ்ந்தான் !
அவன், தான் தரையில் நடப்பவன் என்ற நிலையை மறந்து ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான்.
ஆசை தவறல்ல ஆனால் ஆசைக்கான ஆயத்த படிகளை கணக்கிட்டு அதன் படி நேர்மையான பாதையில் பயணித்தல் மிக அவசியம் என்பதை மட்டும் அவன் மறந்துவிட்டான் !!
- இரா.சுதர்சன்
No comments:
Post a Comment