Saturday, 4 May 2013

மனிதம்.....

   நேற்று காலை சுமார் எட்டு மணி அளவில் நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் போது,  நான் சென்று கொண்டிருந்த வாகனத்திற்குப் பின்னல் ஒரு முதலுதவி வண்டி (ஆம்பூலைன்ஸ்) வந்ததை கண்டு எங்கள் வாகன ஓட்டுனர்  பேருந்து நிறுத்தம் என்பதால் வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தினர், முதலுதவி வண்டி எங்களை கடந்து செல்லும் போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடைய ஒருவரை கண்டேன் அவர் அந்த முதலுதவி வண்டியை பார்த்ததும்  பிராத்திக்க கண்டு வியந்த நான் மகிழ்ச்சியும் அடைந்தேன் காரணம் அவரை போல மற்றொரு நபரும் பிரார்த்தனை செய்தது, இதில் மகிழ்ச்சி என்னவென்றால் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். சாதி, மதம், இனம், மொழி,முகம் என்று எதைப் பற்றியும்  தெரியாத ஒருவருக்காக  அவர் விரைவில் குணம் அடைந்து வரவேண்டும் என்ற நல் உள்ளம் கொண்ட இவர்கள் மதத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனிதம் என்ற ஒன்றால் இணைக்கப்பட்டுள்ளனர் என்று....!!

-இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment