Monday, 9 January 2012

கவலைகள் கண்ணீராய் கைக்கோர்த்து
கேட்பார் யாருமின்றி தனிமையில்
தனிமரமாய் நான் இருக்க..
காற்றை கிழிக்கும் ஊஞ்சல் போல
என் கவலைகளை கிழிக்க வந்தவளே
காதலெனும் கப்பலேறி
மணம்முடித்து கறைக்காண வைத்த
கலங்கரை விளக்கே..
கவலைதனை மறக்கவைத்து
காவியம் படைக்க வைத்தவளே
நீ உறங்க நான் பாடி
உன் கனவினை அனுபவிக்கிறேன்
என் கண்விழித்து..
என் பெண்ணே,
உன்னால் இன்று என் கவலைக்கண்ணீர்
ஆனந்த கண்ணீராய்.....!!


- இரா.சுதர்சன்



No comments:

Post a Comment