நிழல்..
(அவனும் - அவனது மாற்றமும்,
(அவனும் - அவனது மாற்றமும்,
பகுதி - 3 ஒளி - 2)
மாட மாளிகை கட்டி
மண் பொருள் சேர்க்க ஆசையில்லை..
மனிதனாக வாழ மட்டும்...!
மண் பொருள் சேர்க்க ஆசையில்லை..
மனிதனாக வாழ மட்டும்...!
சிறையில் இருந்து வீடு திரும்பியவன் என்னதான் துன்பம் அனுபவித்திருந்தாலும் பணத்தின் மீதான குறிக்கோள் அவன் மனதிலிருந்து சிறிதளவும் மாறவில்லை, குடும்பத்தார் உற்றார் உறவினர் நண்பர்கள் என எவர் பேச்சையும் கேட்காது அனைவரயும் கைகழுவி விட்டு பெட்டிப் படுக்கையுடன் வெளியூர் புறப்பட்டான்.
ஆனால் இனி ஒருபோதும் தவறான பாதையில் சென்று மட்டும் பணம் சம்பாரிப்பதில்லை என உறுதி பூண்டான்.
தான் எண்ணியது போல நல்லதோர் வேலையிலும் அமர்ந்தான், இரவு பகல் பாரது உழைக்க ஆரம்பித்தான் சிறுக சிறுக பணம் சேர குடும்பத்தார் உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைவரையும் மறந்தான், அவன் நினைத்தவாரே சொகுசான ஆடம்பர வா ழ்கையை வாழ ஆரம்பித்தான்.
காலங்கள் கடந்து சென்றது.. ஓர் நாள் படுக்கையை விட்டு விலகமுடியாத அளவிற்கு தீடிர் உடல் நல குறைவு ஏற்பட்டது, தண்ணீருக்காக தவித்தது அவன் வரட்சியான நாக்கு.. கூப்பிடும் தொலைவில் யாருமில்லை.. இப்போது நம்முடன் யாரேனும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவன் மனம் அசைபோட்டது, சாதாரண இருமலுக்கு மருத்துவமனைக்கு செல்லலாம் வா என்றும் தேனும் துளசி சாரும் கலந்து தந்த கூட்டுக் குடும்பத்தாரையும் சற்றே நினைத்துப் பார்த்தான், பாசத்திற்கு முன் பணமென்பது ஒரு பெரிய விசயமே அல்ல என எண்ணினான் மனம் வருந்தி கண்கள் கலங்கிய அவனின் வறண்ட நாக்கை கண்ணீர் துளிகள் ஈரப்பதமாக்கியது.!!
-இரா.சுதர்சன்
சூப்பர்...
ReplyDelete