Saturday, 7 April 2012

விழிப்புடன் ( சிறுகதை ) :

                          அது ஒரு வெள்ளிக்கிழமை மிக ரம்மியமான அந்திமாலை நேரத்தில் அவசர அவசரமாக தனது அலுவலக பணியை முடித்துவிட்டு தான் தங்கியிருக்கும் அலுவலக விடுதியை நோக்கி புறப்பட்டான் மது,  அறைக்கு சென்றடைந்ததும் அறையிலிருந்த அழுக்கு துணிகளையெல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு மூட்டைக்கட்டினான் ,  பின் இதமாய் ஒரு குளியலை முடித்துவிட்டு மிடுக்கான உடை முக மற்றும் சிகை அலங்காரம், உணவு என ஒரு வழியாக அனைத்தையும் முடித்துவிட்டு குடிப்பதற்கு பாட்டிலில் சிறிது வெந்நீரையும்  எடுத்துக்கொண்டு  அருகில் இருக்கும் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டான், ரயில் நிலையம் சென்றடைந்ததும் நடைமேடை அருகே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான் அப்போது ஒலிப்பெருக்கி கணிணியின் குரல் ஒலித்தது மது செல்ல வேண்டிய ரயில் ஒருமணி நேரம் தாமதமாக வரும் என்று எதிர்பார்கப்படுகின்றது என்று கூற மதுவின் முகத்தில் சிறிய கோபம்,  கோபத்துடன் அமர்ந்திருந்தவனிடம் கிழிந்த சட்டையுடன் ஒரு முதியவர் வந்து சாப்புட்டு ரெண்டு நாளாச்சு காசு தந்து தர்மம் பண்ணுங்க சாமி என்று கூற பரிதாபப்பட்ட மது வாங்க என்று அருகிலிருந்த சிற்றுண்டி கடையை காண்பித்து வாங்க அங்க சாப்பாடு வாங்கித்தரேன் என்றான் அதற்க்கு அம்முதியவரோ உங்களுக்கு எதுக்கு சிரமம் காசு குடுங்க சாமி நா வாங்கி சாப்டுக்குறேன் என்றான் அதற்க்கு மதுவோ சற்று கோவமாக காசெல்லாம் குடுக்க முடியாது கடைக்கு வந்த சாப்பாடு வங்கி தரேன் என்று கூற முதியவரோ முனுமுனுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் மதுவின் மனதிலோ சிறிய குற்ற உணர்ச்சி தவறு செய்துவிட்டோமோ,என்று சிறிது நேரம் கழித்து அதே முதுயவர் மதுவிடம் வர மது அவரை மேலும்கீளுமாக பார்த்தான் அப்போது அந்த முதியவர் சாராய வாடை வீச மதுவிடம் பேச ஆரம்பித்தார் சாமி சாப்பாடு வாங்கி தரேன்னு சொன்னியே இப்ப வாங்கி தா என்றார்  மது முதியவரிடம் பேச ஆரம்பிக்கும் போது திடீரென்று அந்த முதியவர் அந்த இடத்தை காலி செய்ய ஒரு போலீஸ்காரர் மதுவிடம் என்ன அந்தாளு உங்கிட்ட காசு கேட்டனா என்று கேட்க்க ஆமாம் என்று பதிலளித்தான் மது, அந்த ராஸ்கலுக்கு எல்லார்கிட்டயும் காசு வாங்கி தண்ணி அடிக்கறது தான் வேலையே , மறுபடியும் வந்து காசு கீசு கேட்ட குடுத்துராதீங்க என்று கூறி எங்க போகணும் என்று கேட்க மதுவும் ஊர் பெயரை சொல்ல அங்கிருந்து போலீஸ்க்காரர் நகரத்தான் மதுவிற்கு தெரியவந்தது தான் முன்பதிவு செய்திருந்த பயணசீட்டை அறையிலேயே மறந்து வைத்துவிட்டோமென்று, மீண்டும் தான் தங்கியருந்த அறைக்கு வந்து பயணசீட்டை எடுத்துக்கொண்டு மூச்சு வாங்க ஓட்டம் பிடித்து ரயில்நிலையம் சென்றடைவதர்க்கும் மது செல்ல வேண்டிய ரயில் மேடைக்கு வரவும் சரியாக இருக்க பதட்டத்துடன் ரயிலில் ஏறி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது இளைப்பாறிவிட்டு கைபேசி மூலமாக வீடிற்கு தொடர்புகொண்டான், அம்மா ந ட்ரைன்ல ஏறி உக்காந்துட்டேன் என்று கூற அம்மாவோ சாப்டியா தங்கோ  என்று கேட்க ந ரூம்ல சாப்டுட்டுத்தா வந்தேன் மா நா நாளைக்கு காலைல நேரமாவே வந்துடுவேன் மா நீங்க சாப்டுட்டு தூங்குங்க என்று கூற சரிப்பா  உன்ன பிக்அப் பண்ண அண்ணன ஸ்டேஷனுக்கு அனுப்பிவக்கிறேன் நீ பாத்து பத்தரம வா என்றல் மதுவும் சரிமா வந்தறேன் குட்நைட் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு ரயில் ஒலிபெருக்கிக்கொண்டே நகர ஆரம்பிக்க  ஜன்னல் வழி வேடிக்கைப்பார்த்தபடியே தூங்க ஆரம்பித்தான் மது, அதிகாலை நேரம் மது ஆழந்த உறக்கத்தில் இருக்க கைபேசியின் மணி ஒலித்தது  தூக்க கலக்கத்தில் தனது அண்ணனின்  அழைப்பை ஏற்ற மதுவிடம் எந்த இடத்துக்கிட்ட வந்துட்டு இருக்க என்றான் மதுவோ ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்துவிட்டு கிளம்பி வாடா இன்னும் அரைமணி நேரத்துல ட்ரைன் ஸ்டேஷன ரீச் ஆயிடும் என்று கூற மறுமுனையிலிருந்து மதுவின் அண்ணன் சரி  ரீச் ஆனதும் கூப்புடு டா என்று சொல்ல சரி என்று சொல்லி தொடர்பை துண்டித்தான் மது , அதிகாலையில் சில்லென்ற காற்றை அனுபவித்த வாரே மீண்டும் தூங்க ஆரம்பித்தான், தொடர்வண்டி நிலையத்தை அடைய சல சலப்பை கேட்டு துயிலெழுந்து அவசர அவசரமாக தன் பையை தூக்கிக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினான், வெகு நாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள மகிழ்ச்சியிலிருந்த மது தனது அண்ணனுக்கு கைப்பேசி மூலமாக தொடர்புக்கொண்டு நா ஸ்டேஷன் வந்து ரீச் ஆகிட்டேன் நீ எங்க டா வந்துட்டு இருக்க என்று கேள்வி எழுப்பினான் குறும்புகார மது மறுமுனையிலிருந்து வந்துட்டே இருக்கேன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா என்று கூற சரி சீக்கிரமா வா என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டு ஊருக்கு வந்தடைந்த சந்தோஷத்தில் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தான் மது, பறவைகளின் சத்தத்தில் சில்லென்ற காற்றுக்கு இதமாக தேநீர் பருக அவன் மறுத்தாலும் அவன் கால்கள் இழுத்து சென்றது பேருந்து  நிலையத்தின் அருகே இருத்த ஒரு தேநீர் விடுதிக்கு, வெகு நாட்கள் கழித்து தேநீர் விடுதியில் நுழைந்த மது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்  அண்ணா ஒரு டீ என்று கூறிவிட்டு மேஜை மேல் வைத்திருந்த நாளேடை புரட்ட ஆரம்பித்தான் சார் இந்தாங்க டீ என்று மேஜையின்மேல் தேநீரை வைத்தார் அங்கிருந்த ஒரு வேலையாள், சில்லுனு காத்து  சூடான டீ வாவ் வாவ் என்று தனக்குள் முனுமுனுத்துக்கொண்டே தேநீரை பருகிவிட்டு அண்ணா ஒரு டீ என்று கூறி பத்து ரூபாயை நீட்ட அவரிடமிருந்து மீத இரண்டு  ரூபாயை பெற்றுக்கொண்டு விலைவாசி எங்கயோ போயிட்டு இருக்குது போல ம்  எதிர்காலத்துல என்ன ஆக போகுதோ என்று புலம்பியவாரே கைபேசி எடுத்து தன் அண்ணனுக்கு மீண்டும் அழைத்தான் மது, அண்ணனிடமிருந்து பதிலேதுமில்லை மறுமுறை அழைக்க மதுவின் அண்ணனோ அஞ்சே நிமிஷம் வந்தறேன் நீ எங்க வெயிட் பண்ற என்று கேட்க்க, நா பஸ் ஸ்டாண்ட் கிட்ட வெயிட் பண்றேன் சீக்கிரமா வாடா என்று கூற மதுவின் அண்ணன் சரி அங்கேயே வெயிட் பண்ணு நா வந்துட்டேயிருக்கேன் என்றான் சற்றே கோவத்துடன் ம் சரி சீக்கிரமா வா என்று கூறி தொடர்பை துண்டித்தான் மது , பேருந்து நிலையத்தில் அமர்ந்துக்கொண்டு வந்து சென்றுக்கொண்டிருந்த பேருந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அப்போது அங்கே ஒரு பெண்மணியின் உரத்த குரல் கேட்டு அங்கு தன் தலையை திருப்பிப்பார்த்தான் மது அதிகாலை வேளையில் அகர்பத்தி பற்ற வைத்து புகை மணமணக்க மங்களகரமாக முகத்தில் மஞ்சள் பூசி நெற்றி நிறைய விபுதி, நெற்றியின் நடுவே சிவப்பு பவுர்ணமி போல குங்குமமும் இட்டு ஒரு பெட்டியும் கையுமாய் பேருந்து நிலையத்தில் ஓரமாக தரையில் அமர்ந்து ஒரு வழிப்போக்கரிடம் பேசிக்கொண்டிருந்தால் ஒரு  பெண்மணி அருகே செல்ல அந்த வழிப்போக்கரும் அங்கிருந்து சென்றார், கிளியின் பெயரைக்கூறி கூண்டுக்குள் போக சொல்ல அவ்வாறே கிளியும் கூண்டுக்குள் சென்றது கிளியை கூண்டினில் அடைத்துவிட்டு  கையில் வைத்திருந்த ஒரு கோலை பெட்டியில் வைத்தால், தேநீர் விடுதியில் புலம்பியது தன் காதில் கேட்டது போல அந்த பெண்மணி மதுவைப்பார்த்து வா தம்பி வா உன்னோட எதிர்காலம் எப்புடி இருக்குமுன்னு ஜோசியம் பார்க்கலாம் என்று கூற சற்று புருவத்தை உயர்த்தி யோசித்தான், அந்த பெண்மணியோ பத்து ரூபாதா தம்பி என்று கூற அந்த பெண்மணியின் அருகே சென்று ஜோசியம் பார்க்க அமர்ந்தான், தனதருகே  இருந்த பெட்டியை திறந்து ஒரு கோலை எடுத்து தனது கையில் வைத்துக்கொண்டு சில கடவுள்களின் பெயர்களை கூறிவிட்டு கையா ? கிளியா ? என்று அந்த பெண்மணி வினவ  மதுவோ என்ன என்று எதிர் கேள்வி எழுப்பினான் அதற்க்கு பதிலாக கிளி ஜோசியமா? இல்ல கைரேகை ஜோசியமாணு கேட்டேன் தம்பி என்று கூறினால் அப்பெண்மணி மது சிறிது யோசித்துவிட்டு கிளி என்றான் பெட்டியுடன்  இணைத்து  வைக்கப்படிருந்த கூண்டை திறந்தால் அந்த பெண் உள்ளே இருந்த கிளி வெளியே வரும் என்று எதிர்ப்பார்த்த மதுவிற்கோ சற்று ஏமாற்றம் கூண்டை விட்டு கிளி வெளியே வரவில்லை உடனே அப்பெண்மணி பெட்டியின் முன்பு வைத்திருந்த ஒரு சிறு துணி விரிப்பின் அருகே கையை காட்டி ஒரு பத்து ரூபா நோட்ட இங்க போடுங்க தம்பி என்று கூற அப்படியே செய்தான் மது, வா மா வா தம்பி பணத்த வச்சுட்டாருமா வெளிய வா என்று கூற கிளியும் கூண்டை விட்டு வெளியே வந்தது அந்த கிளியை வியந்து நோக்கினான் மது. உங்க பேர சொல்லுங்க தம்பி கிளிய சீட்டு எடுக்க சொல்லலாம் என்று கூறி பெட்டியில் இருந்த சில சீட்டுகளை எடுத்து அந்த விரிப்பின் மேல் போட மதுவோ எனக்கு வேண்டாம் எனக்கு தெருஞ்ச ஒரு பொண்ணுக்கு தா பாக்கணும் என்று கூற அப்புடிய தம்பி சரி ஆகட்டும் அந்த பொண்ணு பேர சொல்லுப்பா என்றால், சற்று தயக்கத்துடன் மீனாட்சி  என்றான் மது, வாமா வந்து மீனாட்சின்ற பேருக்கு ஒரு நல்ல சீட்டா  எடுமா என்று செல்லமாக தன் கிளியிடம் கூறினால் அப்பெண் தன் எஜமானி சொன்னது போல தன் அலகினால் ஒரு சீட்டையும் எடுத்தது சாமிய நல்ல கும்புட்டுக்கோமா என்று அந்த பெண்மணி கூற தன்னை  தானே மூன்று முறை சுற்றிவிட்டு அந்த சீட்டை அப்பெண்மணியின் கையில் தந்தது கிளி, சீட்டில் ஒரு கடவுளின் உருவப்படம் வர பெட்டியில் இருந்த புத்தகத்தை எடுத்து அந்த படத்திற்க்கான ஒரு பாடலை  பாட்டாக படித்துவிட்டு விளக்கம் கூற ஆரம்பித்தால் அப்பெண் இனிமேல் மீனாட்சிக்கு நல்ல காலம் தான் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி யார்கிட்டயும் எதுக்காகவும் நிக்கமட்டாங்க இவங்க தான் மத்தவங்களுக்கு எஜமானிய இருப்பாங்களே தவிர இவங்க யார்கிட்டயும் ஊழியரா பணிப்புரிய மாட்டாங்க இவங்களை யாரும் பூட்டுப்போட்டு கூண்டுக்குள்ள அடச்சுவக்க முடியாது  ஒரு சுதந்திர பறவையாதா சுற்றித்திறிவாங்க என்று அப்பெண்மணி கூறக்கூற, டேய் காலங்காத்தால என்னடா பண்னிட்டு இருக்க உனக்கு வேற வேல இல்லையா வாடா போலாம் என்று ஒரு சத்தம் என்னவென்று திரும்பிப்பார்க்க மதுவின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது அது மதுவின் அண்ணன், அண்ணனை பார்த்த சந்தோஷத்தில் எப்புடிடா  இருக்க என்று அண்ணனிடம் பேசிக்கொண்டே அந்த பெண்மணியின் முகத்தை சற்று கோபத்துடன் உற்று நோக்கியவாரு அங்கிருந்து விடைப்பெற அந்தப்பெண்ணோ கிளியை பார்த்து போ மீனாட்சி போ கூண்டுக்குள்ள போ என்றால் எஜமானியின் கட்டளையை ஏற்ற  மீனாட்சியோ கூண்டுக்குள் சென்றால் அழகாய் சோகத்துடன் கத்திக்கொண்டே......
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment