இப்படியுமா !! ( சிறுகதை ) :
அது ஒரு வெள்ளிக்கிழமை அழகான அதிகாலை நேரம் ஊர் முழுக்க மழை பெய்து ஓயிந்திருந்த மிக அமைதியான நேரத்தில் பறவைகள் ரம்மியமான சத்தத்துடன் சந்தோசமாக தனது கூடுகளை விட்டு வெளியே வர மது மட்டும் சோகத்துடன், பணியின் காரணமாக அலுவலகத்திற்கு கிளம்பினான், வீட்டு வாசலருகே வந்ததும் நா போய்ட்டு வரேன் என்று கூறினான் தன் மனைவியிடமிருந்து பதில்வராத நிலையில் கோபத்துடன் நா போய்ட்டு வரேன்னு சொன்னேன் காது கேட்குதா இல்லையா ? என்று கூற பாத்திரம் உருளும் சத்தம் கேட்ட மது எதுவும் பேசாமல் இடத்தை காலி செய்தான்,
அலுவலகத்தில் மதுவின் நண்பர்கள் ஏன்டா ஒரு மாதிரியா இருக்க உன் மூஞ்சி எப்பவும் போல இல்லையேட மது என்னாச்சுடா என்று வீனவ, சிறு புன்னகையுடன் ஒண்ணுமில்ல நேத்து மழை பேஞ்சுதுள்ள இடி சத்தம் சாதாரணமாவே கரண்ட் இருக்கறதில்ல நேத்து மழை வேற சொல்லவா வேணும் அதான் சரியா தூக்கமில்லாம கொஞ்ச டயர்டா இறுக்கு மத்தபடி வேற ஒண்ணுமில்லடா என்று வாய் கூற மதுவின் மனமோ அதற்க்கு முன்தின இரவை நோக்கி சென்றது....
அடை மழை பெய்து கொண்டிருந்த வேலை அது, விடாது பெய்துக்கொண்டிருந்த மழை போல விடாது பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தாள் மதுவின் காதலித்து கைக்கோர்த்த மனைவி இடியின் சத்தத்தை காட்டிலும் அவன் மனைவியின் சத்தம் மிக அதிகமாகவே இருந்தது,
காரணம் சரிவர அண்ணனை பார்க்க முடியல கடைக்கு கூட்டிட்டு போங்கணு ஒரு வாரமா கேட்டுகிட்டே இருக்கேன் ஆனா நீங்க பதிலே சொல்ல மட்டேன்குறீங்க என்று கூறிக்கொண்டிருந்தால், அவளது அண்ணன் இவர்கள் வசித்து வந்த இடத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் ஒரு வாகன உதிரி பாகக்கடை நடத்தி வருகிறார்,
இதற்க்கிடையே மதுவின் மனைவி நாளைக்கு நம்ம கடைக்கு போறோம் நேரத்துல வராம இருந்து பாருங்க அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும் என்று பயம் காட்ட அலுவலக பணியை முடிக்காமலே அவசர அவசரமாய் தனது காதல் மனைவியின் கோபத்தை குறைக்க வீட்டை நோக்கி புறப்பட்டான் மது ,
மதுவின் நேரம் வழி நெடுக சாலை நெரிசலில் சிக்கி வீடு சென்றடைய கால தாமதமானது தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்து விட்டு வீட்டினுள் நுழைந்த மது அதிர்ச்சி அடைந்தான், காலையில் தான் புறப்படும் போது திறந்து வைத்த வீட்டின் கதவு அப்படியே இருக்க வீடு பெருக்காமல் அறை முழுவதும் தூசியாகவும் சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என ஆனைத்தும் அறை முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்க படுக்கை அறை மட்டும் உள்பக்கமாக தாளிட்டிருந்ததை தெரிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தான்,
அறையை திறக்க முயற்சித்த மதுவிர்க்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது தன் காதல் மனைவி பிரிந்த சோகத்தில் மனுச்சுக்கோம டிராபிக்ல வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதுக்குப்போய் இந்த மாதிரி முடிவேடுத்துட்டியேம என கண்ணீர் மல்க புலம்ப ஆரம்பித்தான் திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதைத்திரும்பிப்பார்க்க அதிர்ச்சியானான் மது,
அது அவனின் மனைவி, மனைவியை கண்டு சந்தோஷத்தில் என்ன காரியம் பண்ணுன என்று கேட்க்க கொஞ்ச அசந்து தூங்கிட்டேன் அதுக்கு ஏன் இப்புடி பொலம்பி தள்ளிட்டு இருக்கீங்க என்றால் சாதரணமாக,
மதுவோ சரி சீக்கிரம் கிளம்பு உங்க அண்ணன் கடைய அடச்சுட்டு போயரப்போறாரு அதுக்குள்ள அவர பாத்துட்டு வந்தறலாம் என்றான்,
ஆச்சிரியத்துடன் அண்ணனோட கடைக்கா ? எதுக்கு என்றால் மதுவின் மனைவி, எதுக்கா நீ தாணு ஒரு வாரம அண்ணன சரியா பாக்க முடியல கடைகுப்போகனுமுனு சொன்ன என்று கூறக்கூற மதுவிர்க்கோ மிகப்பெரிய அதிர்ச்சி மனைவியின் பதிலைக்கேட்டு,
நா சொன்னது என்னோட அண்ணன் இல்ல டிவில வர மெகா சீரியல் அண்ணன சொன்னேன் இப்பெல்லாம் கரண்டில்லாம சீரியல சரியா பார்க்க முடியறதில்ல அதான் கடைக்குப்போய் நல்லதா ஒரு இன்வர்டர் வாங்கிட்டு வந்தரலானு தா உங்கள கூப்டுட்டே இருந்தேன் என்றுக்கூற மிகுந்த கோபமடைந்த மது முதல் முறையாக தனது மனைவியின் கண்ணங்களை தனது கை பதம் பார்க்க அதிர்ந்துபோய் உறைந்து நின்றாள் மதுவின் மனைவி.

- இரா.சுதர்சன்
No comments:
Post a Comment